

மித்ரன்: நேற்று class-ல dictation வச்சாங்க. off-க்கு பதிலா of-ன்னு போட்டுட்டேன். ஒரு mark போய்டுச்சு. ஒரு சின்ன mistake இதுக்கு போய் குறைச்சிட்டாங்களேன்னு ஒரே feeling.
இனியன்: ஏன்னு mam கிட்ட கேட்டுருந்தா சொல்லி இருப்பங்களே!
மித்ரன்: கேட்டேனே. அவங்க சின்ன mistake இல்லை இது. ரொம்ப பெரிய mistakeன்னு சொல்லிட்டாங்க. எனக்கு தான் ஒரு f குறைஞ்சா எப்படி பெரிய தப்பு ஆகும்ன்னு தலைக்குள்ள கேள்வி ஓடிட்டே இருக்குது.
இனியன்: mam சொன்னது சரிதான். உச்சரிப்பே இரண்டுக்கும் வேற. அது உனக்கு தெரியுமா?
மித்ரன்: அப்படியா?
இனியன்:
Of - av
Off - aaf
of-க்கு ஆ-ன்னு வாயை முழுசா திறக்கவும் கூடாது. அ-ன்னும் நீட்டக் கூடாது. இரண்டுக்கும் நடுவில் சின்னதா சொல்லணும். (of - av அவ்)
அதேபோல off-க்கு ஆ-ன்னு கொஞ்சம் வாயை திறந்து சொல்லணும். இதுக்கு f-ற்கு அதோட sound-ஐ கொஞ்சம் அழுத்தி சொன்னால் போதும்.
இசை: உச்சரிப்பிலே இவ்வளவு வித்தியாசம் இருக்குதுன்னா, usage வேற வேறதான இருக்கும்.
மித்ரன்: ஆமாம். இப்போ கொஞ்சம் புரியுது.
இசை: ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கக் கூடிய வேளையில் of பயன்படுத்தனும்.
ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பை நீக்கக் கூடிய வேளையில் off பயன்படுத்தனும்.
உமையாள்: எந்த மாதிரியான தொடர்பு இருகக் கூடிய இடத்துல of பயன்படுத்தனும்னா...
1. ஒரு பொருளுக்கும், மற்றுமொரு பொருளுக்கும் இடையே உள்ள தொடர்பு.
2. ஒரு மனிதருக்கும், மற்றுமொரு மனிதருக்கும் இடையே உள்ள தொடர்பு.
3. மனிதருக்கும், பொருளுக்கும் உள்ள தொடர்பு.
4. ஒரு விஷயத்திற்கும், மற்றுமொரு விஷயத்திற்கும் உள்ள தொடர்பு.
மித்ரன்: of அப்படின்னா to show the connectionன்னு சொல்லுங்க.
உமையாள்: ஆமாம். off இதுக்கு அப்படியே opposite. Disconnect செய்யக்கூடிய இடத்துல சொல்லணும்.
WordPronunciationUsage placeofavTo show the connectionoffaafTo show the disconnection
இசை: இந்த examples எல்லாத்தையும் கொஞ்சம் கவனிச்சு பாரு. This is for your reference.
Examples with “of”
1. The shirt is made of cotton. சட்டை பருத்தியால் ஆனது.
2. A handful of rice. ஒரு கைப்பிடி அரிசி.
3. Mithran is a friend of Iniyan. மித்ரன் இனியனின் நண்பன்.
4. Iniyan is born on the 1st of October. இனியன் அக்டோபர் 1ஆம் தேதி பிறந்தான்.
5. He gave her a ring of pearl. அவளுக்கு ஒரு முத்து மோதிரத்தை அவன் கொடுத்தான்.
6. She is a teacher of English. அவர் ஒரு ஆங்கில ஆசிரியை.
Examples with “off”
1. Take off your shoes. உங்கள் காலணிகளை கழற்றுங்கள்.
2. Stay off the negative thoughts. எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி இருங்கள்.
3. He went off in a hurry. அவசரமாக கிளம்பினான்.
4. I turned off the radio. ரேடியோவை அணைத்தேன்.
5. His birthday is a long way off. அவரது பிறந்தநாள் இன்னும் நெடுங்காலம் உள்ளது.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்