கொஞ்சம் technique கொஞ்சம் English - 53: Possessive Pronoun பற்றி பார்ப்போமா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 53: Possessive Pronoun பற்றி பார்ப்போமா?
Updated on
2 min read

இனியன்: உன் கையில் உள்ள பேனா அழகாக இருக்கிறது. அப்பாவின் பேனாவா அது?

மித்ரன்: ம்ம்ஹ்ம். அது என்னுடையது. நீயும் புது பேனா ஒன்று கொண்டு வந்திருக்கிறாயே இனியன்.

இனியன்: இது என்னுடையது இல்லை. எனது அக்காவினுடையது.

இசை: இன்னைக்கு, உங்களுக்கே தெரியாம நீங்க இரண்டு பேரும் ஒரு நல்ல காரியம் செஞ்சிருக்கீங்க.

மித்ரன்: அப்படியா? என்ன அது?

இசை: என்னுடையது, அக்காவினுடையது, அப்பாவினு டையதுன்னு பேசிட்டு இருந்தீங்கள்ல. அதை பத்திதான் இப்போ நாம பார்க்க போறோம்.

மித்ரன்: இதில் பார்க்கிறதுக்கு என்ன இருக்குது அக்கா?

இசை: இந்த பேனா என்னுடையது அப்படிங்கிறது English-ல எப்படி சொல்லுவோம்?

This is my mine.

The pen is mine.

இந்த பேனா அக்காவினுடையது அப்டிங்கிறதை English-ல எப்படி சொல்லுவோம்?

This is hers.

This pen is hers.

இந்த பேனா அப்பாவினுடையது அப்டிங்கிறதை English-ல எப்படி சொல்லணும்?

This is his.

This pen is his.

என்னுடையது, அவளுடையது, அவருடையதுன்னு உரிமை கொண்டாடுறோம் இல்லையா? இதைத்தான் Possessive Pronouns-ன்னு சொல்லுறாங்க.

மித்ரன்: இதே மாதிரி Possessive Pronouns எத்தனை இருக்குது?

இசை: மொத்தம் ஏழு subject நமக்கு இருக்குது. இந்த ஏழு subject-க்கும் Possessive Pronoun உண்டு.

உமையாள்: இந்த பேனா அப்பாவினுடையதா அப்படின்னு ஒரு கேள்வி உன்கிட்ட கேட்ட போது உன்னுடைய பதில் என்ன?

This pen is my pen not my father’s pen. (இந்த பேனா என் பேனா என் தந்தையின் பேனா அல்ல.)

இதில் பேனா என்கிற வார்த்தை அடிக்கடி வருது. இதை நாம simplify செய்து இப்படி சொல்லலாம்.

This pen is mine not my father’s. (இந்த பேனா என்னுடையது, என் தந்தையுடையது அல்ல.)

இசை: இரண்டு sentence-க்கும் ஒரே அர்த்தம்தான். நம்ம உணர்வையும் உரிமையையும் கொஞ்சம் அதிகமா கலந்திருக்கிறோம்.

Sentence ஆரம்பிக்கும்போது Possessive Pronoun வரவே வராது.

உமையாள்: Ok. Let’s practice with some situations.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in