

இனியன்: நாம ஒரு தடவை பார்த்தோமே. for-க்கு பின்னால் verb வந்தால் கண்டிப்பாக ing சேர்க்க வேண்டும் என்று.
இசை: அதுபோல before மற்றும் after என்கிற வார்த்தைகளுக்கு பின்னால் verb வரும்பொழுது ing சேர்க்க வேண்டும்.
மித்ரன்: அப்படியா? before என்றால் “முன்னால்” after என்றால் “பின்னால்” என்று தெரியும்.
மித்ரன்: இதை எங்கு சரியாக பயன்படுத்த வேண்டும் என்று விதிமுறைகள் இருக்கிறதா?
உமையாள்: பொருட்களுக்கு முன்னால் மற்றும் பின்னால் பயன்படுத்தலாம்.
இடத்திற்கு முன்னால் மற்றும் பின்னால் பயன்படுத்தலாம்.
நேரத்திற்கு முன்னால் மற்றும் பின்னால் பயன்படுத்தலாம்.
அனைத்து விதமான உயிருள்ளவை மற்றும் உயிரற்றவை வரும் இடங்களில் முன்னால் மற்றும் பின்னால் பயன்படுத்தலாம்.
வினைச்சொற்கள் வரும் வேளைகளில் பயன்படுத்தலாம்.
இந்த இரண்டு வார்த்தைகளும் இரண்டு சொற்றொடர்களை சேர்ப்பதற்கும் பயன்படுத்தலாம்.
சுருக்கமா சொல்ல வேண்டுமென்றால் எல்லா இடங்களிலும் நேரங்களிலும் சூழ்நிலைகளிலும் இந்த இரண்டு வார்த்தைகளை பொருத்தி சொல்ல முடியும்.
இனியன்: நிறைய யோசிக்க வைக்கிற மாதிரி இருக்குதா?
இசை: ரொம்ப எளிது மித்ரன். இப்போ பாரேன். இன்று எப்போது பள்ளிக்கு வந்து சேர்ந்தாய்?
மித்ரன்: school bell அடிக்கிறதுக்கு முன்னால் நான் வந்துட்டேன்.
இசை: இதை இப்படி சொல்ல வேண்டும். I arrived at school before ringing the school bell.
இனியன்: நாம இங்க பேசிட்டு இருக்கிறோம். அடுத்து நீ என்ன செய்யப் போகிறாய்?
மித்ரன்: நான் வகுப்பறைக்கு செல்வேன்.
இசை: இதை இப்படி சொல்ல வேண்டும். I will go to the classroom after talking with my friends.
உமையாள்: இங்கு verb வந்தால் மட்டுமே ing சேர்த்து சொல்ல வேண்டும்.
இனியன்: Let’s practice some examples today.
இசை: I ate popcorn before coming to the theater. தியேட்டருக்கு வருவதற்கு முன் பாப்கார்ன் சாப்பிட்டேன்.
I ate popcorn after coming to the theatre. தியேட்டருக்கு வந்த பிறகு பாப்கார்ன் சாப்பிட்டேன்.
உமையாள்: I will drink water before walking. நடப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பேன்.
I will drink water after walking. நடந்த பிறகு தண்ணீர் குடிப்பேன்.
இனியன்: I will read a book before sleeping. தூங்கும் முன்னர் புத்தகம் படிப்பேன்.
I will read a book after waking up. தூங்கி எழுந்த பின்னர் புத்தகம் படிப்பேன்.
மித்ரன்: I will eat before drinking water. தண்ணீர் குடிப்பதற்கு முன் சாப்பிடுவேன்.
I will eat after drinking water. தண்ணீர் குடித்த பிறகு சாப்பிடுவேன்.
இசை: I walked before running. ஓடுவதற்கு முன் நடந்தேன்.
I walked after running. ஓடிய பின் நடந்தேன்.
இனியன்: My legs started paining before jumping. குதிக்கும் முன் என் கால்கள் வலிக்க ஆரம்பித்தன.
My legs started paining after jumping. குதித்த பிறகு என் கால்கள் வலிக்க ஆரம்பித்தன.
மித்ரன்: I feel thirsty before eating. சாப்பிடுவதற்கு முன் தாகமாக உணர்கிறேன்.
I feel thirsty after eating. சாப்பிட்டவுடன் தாகமாக உணர்கிறேன்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்