

மித்ரன்: Akka, Do you have any other interrelated prepositions list? அக்கா, ஒன்றுக்கொன்று தொடர்புடைய prepositions list வேறு எதுவும் இருக்குதா?
உமையாள்: A lot is there Mithran. நிறைய இருக்குது மித்ரன்.
மித்ரன்: Please explain to me. கொஞ்சம் சொல்லுங்களேன்.
உமையாள்: Across, along, through இந்த மூன்றிற்கும் உள்ள தொடர்பை பற்றி இப்போது பார்க்கலாம்.
இசை: Let's take this road as an example. இந்த சாலை மாதிரி, வழிப்பாதை ஒன்றை எடுத்துக் காட்டாக வைத்துக் கொள்வோம்.
Here, we should use “across” while crossing the road from one side to another side.
இந்த வழிப்பாதையில், ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்கு குறுக்காக செல்வதை சொல்லும் வேளையில் across பயன்படுத்த வேண்டும்.
We should use “along” while traveling the same route.
இதே வழிப்பாதையில், பாதை போகும் வழியிலே பயணிக்கும் வேளையில் along பயன்படுத்த வேண்டும்.
We should use through when we are using a tunnel for our travel. இந்த வழிப்பாதை சுரங்கப் பாதையாக இருக்கும் பொழுது, அதன் வழியாக உள்ளே நுழைந்து பயணிக்கும் வேளையில் through பயன்படுத்த வேண்டும்.
மித்ரன்: ஒரு ரோடு மேல போறதுக்கு இவ்வளவு இருக்குதா?
இனியன்: இனிமேல் ரோடு மேல போகும் பொழுது குறுக்க போறோமா, நெடுக்க போறோமா, உள்ளாரா போறோமா ன்னு ஒவ்வொரு முறையும் இனி நான் பார்க்க போறேன்.
மித்ரன்: பாட்டி கூட இருந்ததுனால உனக்கு நிறைய தெரியுது இனியா.
இனியன்: அதுவும் உண்மை தான். நாங்க மட்டும் படிச்சா பத்தாது, என்னோட friends எல்லாருமே எங்களோட சேர்ந்து படிச்சா எல்லாருக்குமே நல்லது ன்னு notes கொடுத்து விடுறாங்க.
மித்ரன்: இந்த weekend எல்லாரும் பாட்டியை பார்க்கப் போகலாமா?
இசை: கண்டிப்பா எல்லாரும் வாங்க.
உமையாள்: Ok. let's practice now for today's words.
மித்ரன்: We took a boat across the river. ஆற்றின் குறுக்கே படகில் சென்றோம்.
இனியன்: We walked across the street. நாங்கள் தெருவின் குறுக்கே நடந்தோம்.
இசை: They traveled back and forth across the border. எல்லையைத் தாண்டி முன்னும் பின்னுமாகப் பயணம் செய்தனர்.
உமையாள்: Airplanes flew across the sky above us. எங்களுக்கு மேலே வானத்தில் விமானங்கள் பறந்தன.
மித்ரன்: We walked along the beach. கடற்கரையோரம் நடந்தோம்.
இனியன்: We walked along the road. சாலையோரம் நடந்தோம்.
இசை: We lined up along the ration shop. ரேஷன் கடையில் வரிசையாக நின்றோம்.
உமையாள்: The ship sailed along the coast. கப்பல் கரையோரம் பயணித்தது.
மித்ரன்: He walked through the door. அவர் கதவு வழியாக நடந்தார்.
இனியன்: We walked through the park. நாங்கள் பூங்கா வழியாக நடந்தோம்.
இசை: We passed through the shopping mall. ஷாப்பிங் மால் வழியாக சென்றோம்.
உமையாள்: I heard about the program through a friend. ஒரு நண்பர் மூலம் நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டேன்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்