கொஞ்சம் technique கொஞ்சம் English - 47: by எங்கெல்லாம் வரும்?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 47: by எங்கெல்லாம் வரும்?
Updated on
2 min read

இசை: By என்பது preposition-ன்னு உனக்கு தெரியும். இதில் உள்ள interesting விஷயம் எல்லாம் இப்போ உனக்கு சொல்லுறேன்.

உமையாள்: Yes. We can use “by” for many situations.

மித்ரன்: Means what?

இசை: We will explain to you one by one.

இனியன்: அருகில், போக்குவரத்து, தகவல் தொடர்பு, குறிப்பிட்ட வேளை, யாருடைய உதவியும் இல்லாமல் செய்யும் வேலை, கணிதம், அப்படின்னு நிறைய இடத்தில் பயன்படுத்த போறோம்.

மித்ரன்: ஆகா. இவ்வளவு இருக்குதா! எப்படி ஞாபகம் வச்சுக்கிறது?

உமையாள்: No worries Mithran. We have a table for you. Here it is.

மித்ரன்: Can I get some examples?

உமையாள்: Yes sure. Let's practice together.

Examples

1. The girl is standing by the lake. சிறுமி ஏரிக்கு அருகில் நிற்கிறாள்.

He is standing by the window. அவர் ஜன்னல் ஓரமாக நிற்கிறார்.

2. I come to school by bicycle. நான் மிதிவண்டியில் பள்ளிக்கு வருகிறேன்.

I will travel by train. நான் ரயிலில் பயணிப்பேன்.

3. I send a letter by post. தபால் மூலம் கடிதம் அனுப்புகிறேன்.

I have to send a letter by Friday. நான் வெள்ளிக்கிழமைக்குள் கடிதம் அனுப்ப வேண்டும்.

4. We will go to school by 9 am. நாம் காலை 9 மணிக்குள் பள்ளிக்கு செல்வோம்.

I learn English by reading the newspaper. நான் செய்தித்தாள் படித்து ஆங்கிலம் கற்றுக் கொள்கிறேன்.

5. I buy fruits by giving cash. நான் பணம் கொடுத்து பழங்களை வாங்குகிறேன்.

I learn English by myself. நானே ஆங்கிலம் கற்றுக் கொள்கிறேன்.

6. You can do it all by yourself. எல்லாவற்றையும் நீயே செய்ய முடியும்.

The size of the room is 20 feet by 20 feet. இந்த அறையின் அளவு 20 அடிக்கு 20 அடி.

7. The letter was sent by me. இந்த கடிதம் என்னால் அனுப்பப்பட்டது.

The library was opened by the minister. நூலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in