கொஞ்சம் technique கொஞ்சம் English-43: ஒரே Sentence ல் இரண்டு verb வருமா ?

கொஞ்சம் technique கொஞ்சம் English-43: ஒரே Sentence ல் இரண்டு verb வருமா ?
Updated on
2 min read

மித்ரன்: ரொம்ப easy ஆ prepositions இப்போ புரியுது அக்கா. To, for அவ்வளவு தானா? இன்னும் இருக்குதா?

bWe still have more. Listen this. (இன்னும் இருக்குது. இதைக் கேளு.)

உமையாள்: Will you tell me why did you come to school early? (நீ ஏன் சீக்கிரமாக school-க்கு வந்தாய்ன்னு எனக்கு சொல்லுறியா?)

மித்ரன்: நான் English படிப்பதற்காக சீக்கிரமாக பள்ளிக்கு வந்தேன்.

இசை: இதை நாம இப்படி சொல்லலாம். I came early to school for studying English.

உமையாள்: இப்படியும் சொல்லலாம். நான் English படிக்க சீக்கிரமாக பள்ளிக்கு வந்தேன். I came early to school to study English.

இனியன்: இந்த மாதிரி, ஒரே sentence-ல் இரண்டு முறை verb வரும். அப்படி வரும் போது இரண்டாவது verb உடன் to, for-ஐ சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

உமையாள்: இந்த இடத்தில், இரண்டாவது verb முடிவில்லாமல் இருக்கும்.

இசை: to உடன் verb சேரும் பொழுது verb-க்கு எந்த மாற்றமும் ஏற்படாது. அப்படியே தான் இருக்கும். for உடன் verb சேரும் பொழுது verb உடன் ing சேர்க்க வேண்டும்.

இனியன்: இதோ உனக்காக ஒரு example table வச்சிருக்கிறேன்.

மித்ரன்: புரிஞ்சது மாதிரிதான் தெரியுது. ஆனா...

இனியன்: நம்ம practice செய்தாலே எல்லாம் நம்ம கைக்குள் வந்திடும் மித்ரன்.

உமையாள்: Yes. Let's practice together.

Exercises:

I went to a bakery to buy a cake. (நான் கேக் வாங்குவதற்கு ஒரு பேக்கரிக்குச் சென்றேன்.)

I went to a bakery for buying a cake. (நான் கேக் வாங்குவதற்காக ஒரு பேக்கரிக்குச் சென்றேன்.)

We had gone to theater to watch a movie. (நாங்கள் திரையரங்கிற்கு படம் பார்ப்பதற்குச் சென்றிருந்தோம்.)

We had gone to theater for watching a movie. (நாங்கள் திரையரங்கிற்கு படம் பார்ப்பதற்காகச் சென்றிருந்தோம்.)

Umaiyal stepped down to get the newspaper. (செய்தித்தாள் பெறுவதற்கு உமையாள் கீழே இறங்கினாள்.)

Umaiyal stepped down for getting the newspaper. (செய்தித்தாள் பெறுவதற்காக உமையாள் கீழே இறங்கினாள்.)

Mithran went to park to play football. (மித்ரன் கால்பந்து விளையாடுவதற்கு பூங்காவிற்கு சென்றான்.)

Mithran went to park for playing football. (மித்ரன் கால்பந்து விளையாடுவதற்காக பூங்காவிற்கு சென்றான்.)

Iniyan will go to Chennai to meet his relatives. (இனியன் தனது உறவினர்களை சந்திப்பதற்கு சென்னை செல்வான்.)

Iniyan will go to Chennai for meeting his relatives. (இனியன் தனது உறவினர்களை சந்திப்பதற்காக சென்னை செல்வான்.)

Isai learns English to teach his classmates. (இசை தனது வகுப்பு தோழர்களுக்கு கற்பிப்பதற்கு ஆங்கிலம் கற்றுக்கொள்கிறாள்.)

Isai learns English for teaching his classmates. (இசை தனது வகுப்பு தோழர்களுக்கு கற்பிப்பதற்காக ஆங்கிலம் கற்றுக்கொள்கிறாள்.)

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in