கொஞ்சம் technique கொஞ்சம் English - 41: எதுக்கு to, எதுக்கு for பயன்படுத்தனும்?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 41: எதுக்கு to, எதுக்கு for பயன்படுத்தனும்?
Updated on
2 min read

இசை: நேத்து கொடுத்த prepositions list -ஐ எல்லாரும் படிச்சாச்சா?

மித்ரன்: yes.

இசை: அதில் for என்கிற word -ஐயும் சேர்த்துக்கோங்க. for என்கிற இந்த word-க்கு "க்காக" என்று ஒரு அர்த்தம் வரும்.

இனியன்: இன்னைக்கு நாம to, for என்ற இந்த இரண்டு words எப்போ, எப்படி பயன்படுத்தனும்ன்னு பார்ப்போம்.

மித்ரன்: எனக்கு இந்த ரெண்டு words தான் பயங்கர கொழப்பமா இருக்கும்.

இசை: Very easy. இன்னைக்கு அதை சரி பண்ணிடலாம். இப்போ என் கையில் ஒரு pen வச்சிருக்கிறேன்.

இந்த pen-ஐ நான் மித்ரனுக்கு கொடுக்கிறேன். I give a pen to Mithran.

இந்த pen ஐ நான் மித்ரனுக்காக கொடுக்கிறேன். I give a pen for Mithran.

இப்படி, என் கையில் உள்ள pen- ஐ கொடுக்கும் பொழுது இரண்டு வகையில் என்னால் சொல்ல முடியும்.

மித்ரன்: ஆனால் அக்கா, இரண்டுமே ஒரே மாதிரி தான் தெரியுது. ஆனாலும் வேற மாதிரியும் இருக்குது. எப்படி?

உமையாள்: Exactly. இரண்டுமே ஓன்று கிடையாது மித்ரன்.

இசை: உனக்கு கொடுக்கிறேன் என்பதும், உனக்காக கொடுக்கிறேன் என்பதும், வேறு வேறு தானே.

மித்ரன்: Yes akka. எனக்காக என்பது something special. எனக்கு என்பது எனக்கு கொடுக்கலாம், இனியனுக்கு கொடுக்கலாம், உமையாள் அக்காக்கும் நீங்க கொடுக்கலாம். நான் special அப்படிங்கிறது இங்க புரியுது.

உமையாள்: உனக்கு கொடுக்கிறேன் என்பது ஒரு விஷயத்தை, ஒரு பொருளை நான் பரிமாறிக் கொள்கிறேன் என்பது பொருள். அதாவது transfer or exchange.

இசை: உனக்காகக் கொடுக்கிறேன் என்பது இதன் மூலமாக உனக்கு ஒரு நன்மை, பயன் கிடைக்கிறது. அல்லது இந்த பேனாவை வாங்கும் நீ எனக்கு கொஞ்சம் special. அதாவது benefit or good.

உமையாள்: We will practice now. Grandmother prepared the preposition list for us. (பாட்டி prepositions list -ஐ எங்களுக்காக தயார் செய்தார்.)

இனியன்: Mithran came to school early today. (மித்ரன் இன்று சீக்கிரம் பள்ளிக்கு வந்தான்.)

இசை: Umaiyal brought Newspaper for friends. (உமையாள் நண்பர்களுக்காக செய்தித்தாள் கொண்டு வந்தாள்.)

இனியன்: Isai taught Englilsh to Mithran. (இசை மித்ரனுக்கு ஆங்கிலம் கற்பித்தாள்.)

மித்ரன்: We will go to the classroom. (நாம் வகுப்பறைக்கு செல்வோம்.)

இனியன்: I will come early for you. (நான் உங்களுக்காக சீக்கிரம் வருவேன்.)

இசை: I sing for you . (நான் உங்களுக்காக பாடுகிறேன்.)

மித்ரன்: I went to Chennai. (நான் சென்னைக்கு சென்றேன்.)

உமையாள்: I went to buy a cake yesterday. (நேற்று கேக் வாங்குவதற்கு சென்றேன்.)

இசை: எல்லாருக்காகவும் பாட்டி exercise கொடுத்திட்டு போயிருக்காங்க. அடுத்த வாரம் இது பற்றி பார்ப்போம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in