கொஞ்சம் technique கொஞ்சம் English - 40: இன்னைக்காவது Prepositions list கிடைக்குமா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 40: இன்னைக்காவது Prepositions list கிடைக்குமா?
Updated on
2 min read

மித்ரன்: நேத்து Cat வெச்சு மூணு sentences சொன்னீங்க. அதுல வந்த on, in , under ன்னு மூணு words-க்கு பெயர்தான் prepositions-னும் சொன்னீங்க. மேற்கொண்டு சொல்லுங்க இசை அக்கா.

இசை: இப்படி noun அல்லது pronoun பத்தி கொஞ்சம் தெளிவா சொல்லனும்னா prepositions ரொம்ப அவசியம்.

இசை: preposition என்பது noun or pronoun-கு முன்னால் வைக்கப்படக்கூடிய ஒரு word. இரண்டு words-க்கு இடையே உள்ள தொடர்பை குறிக்கிறதுக்கு நாம preposition-ஐ பயன்படுத்த முடியும்.

இனியன்: பூனை ஒன்னுதான். அது இருக்கிற இடம் மாறிட்டே இருக்குது. அந்த இடத்தை பொறுத்து நாம ஒரு preposition-ஐ sentence-ல சேர்க்கிறோம். மேலே இருந்தால் on-ன்னு சொல்லுறோம். கீழே இருந்தால் under-ன்னு சொல்லுறோம். நடுவில் இருந்தால் in-ன்னு சொல்லுறோம்.

இசை: இதேபோல அருகில், தொலைவில், நடுவில்ன்னு பெரிய list ஒன்னு இருக்குது.

இனியன்: இப்போதைக்கு அடிக்கடி பயன்படுத்தக் கூடிய list ஒன்னு பாட்டி கொடுத்துட்டு போயிருக்காங்க.

இசை: அதை நாம தினமும் practice செய்யும்போது, இந்த words எல்லாம் நமக்கு பழக்கத்தில் வந்திடும்.

இனியன்: அதைத் தான் அன்றைக்கு நீ வரும் போது நாங்க பண்ணிட்டு இருந்தோம் மித்ரன்.

இசை: இதோ, பாட்டி கொடுத்த list. ஒவ்வொரு preposition word-க்கும் தமிழ் அர்த்தம் எழுதி கொடுத்திருக்காங்க.

உமையாள்: Wow! That's awesome really. It will be helpful for everyone who is interested in learning English. Thanks to our Grandmother. (உண்மையிலேயே ரொம்ப நல்ல விஷயம் இது. ஆங்கிலம் கற்க ஆர்வமுள்ள அனைவருக்கும் இது உதவியாக இருக்கும். நம்ம பாட்டிக்கு ரொம்ப நன்றி)

இசை: Yes. Our Grandmother knows the methods very well. When I got the prepositions list from her, I was also excited like you. (நம்ம பாட்டிக்கு methods எல்லாம் நன்றாகத் தெரியும். அவங்க கிட்ட இருந்து இந்த list-ஐ நான் வாங்கும்போது உன்னைப் போலவே நானும் excite ஆனேன். )

மித்ரன்: I am also excited.

உமையாள்: Today, you memorize these words. Tomorrow we will start practising using these words. (இந்த சொற்களை இன்று நீ மனப்பாடம் செய்துவிட்டுவா. நாளை இந்த சொற்களை பயன்படுத்தி பயிற்சி செய்ய ஆரம்பிப்போம்.)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in