கொஞ்சம் technique கொஞ்சம் English - 38: Small or Younger இதில் எது சரி?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 38: Small or Younger இதில் எது சரி?
Updated on
1 min read

மித்ரன்: Hello friends!

இனியன், இசை: Hello Mithran. How are you? Who is this new girl with you? (எப்படி இருக்க மித்ரன்? உன்கூட இருக்கும் இந்த சிறுமி யார்?)

மித்ரன்: நல்லா இருக்கேன். இவள் என்னுடைய தங்கை பிரியா

இனியன், இசை: Why don’t you try to say that in English Mithran! (இதை நீ ஆங்கிலத்தில் சொல்ல முயற்சிக்கலாமே!)

மித்ரன்: ok ok I will try. I am fine. She is my small sister Priya

இசை: Good you gave a try Mithran. But better to say, “She is my younger sister Priya”

இனியன்: small என்றால் சிறிய, இளையவள்னு சொல்றது youngerதான் சரி மித்ரன்

மித்ரன்: ok Thanks. சரி நேத்து விட்ட இடத்துல இருந்து பேசுவோமா? என்னுடைய தங்கையும் கத்துக்க ஆவலா இருக்காள். Tense கூட preposition and conjunction சேர்க்குபோது sentence-ஐ நம்மால விளக்கமா சொல்ல முடியும்ன்னு நேத்து சொன்னீங்க. இதெல்லாம் எப்படி நீங்க கத்துக்கிட்டீங்க?

இசை, இனியன்: All credit goes to our Grandma. (எல்லா புகழும் எங்க பாட்டியைத்தான் போய் சேரும்)

மித்ரன்: அப்படியா...எங்களையும் உங்க பாட்டிக்கிட்ட கூட்டிட்டு போறீங்களா?

இனியன்: Grandma has gone to hometown for an important work (பாட்டி ஒரு முக்கியமான வேலையா சொந்த ஊருக்கு போயிருக்காங்க). She will be back in another week (திரும்பி வர ஒரு வாரம் ஆகும்) So before leaving she taught us about this last weekend (அதனால் இதை பத்தி எங்களுக்கு சொல்லிக்கொடுத்திட்டு போனாங்க).

இசை: அதைத் தான் நாங்க நேத்து practice செஞ்சிட்டு இருந்தோம்.

மித்ரன் : அப்போ பாட்டி notes குடுத்துட்டுதான் போயிருக் காங்க... ஜாலி! சரி அக்கா, prepositions ன்னா என்ன? எங்கே பயன்படுத்தனும்? அதுக்கு formula இருக்குதா ?

இசை: அதாவது மித்ரன், இதுக்கு குறிப்பிட்ட formula எதுவும் கிடையாது. ஆனால், எங்கே என்ன பயன்படுத்தனும்ன்னு என்கிட்டே ஒரு list இருக்குது.

பிரியா: list- ஐ எங்களுக்கும் கொடுங்களேன் அக்கா

இசை: School Assembly bell அடிச்சிட்டாங்க, இப்போ நம்ம இங்க இருந்து கிளம்பலாம். திங்கள்கிழமை இந்த மாதிரி சீக்கிரம் வந்திடு. Detailed ஆ prepositions -ஐ பத்தி பேசுவோம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in