

காலை வீட்டிலிருந்து புறப்பட்டு இசையும், இனியனும் பேசிக்கொண்டே பள்ளிக்குள் நுழைகின்றனர்.
இனியன் : Akka, Look at that tree. Lots of fresh flowers are blooming. (அந்த மரத்தை பாரேன். அதில் புதுசா நிறையை பூக்கள் பூத்திருக்கிறது )
இசை : Yes Eniya, Look under the tree. Lots of little snails are crawling. (ஆமாம் இனியா, மரத்துக்கு அடியில் கூட பாரேன். நிறைய குட்டி குட்டி நத்தைகள் ஊர்ந்து போகுது)
இனியன் : Butterflies are flying among the trees, akka . (நடுவில பட்டாம்பூச்சிகள் பறக்குது அக்கா.)
இசை : Yesterday's rain has done these wonders here. (நேற்றைய மழை இந்த அதிசயங்களை இங்கு செய்திருக்கிறது)
இனியன் : After yesterday's rain, our school looks very beautiful. (மழை வந்த பிறகு, நம்ம ஸ்கூல் பார்க்கவே ரொம்ப அழகா இருக்குது.)
இசை : The trees and plants have taken baths. (மரங்களும் செடிகளும் குளித்திருக்கின்றன)
மித்ரன் : நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க . நீங்க பேசுறது எனக்கு புரியுது . ஆனா English-ல எப்படி இவ்வளவு அழகா பேசுறீங்க?
இசை : உனக்கு தான் தினமும் பாட்டி கொடுத்த assignments எல்லாம் குடுத்தேனே. நீ செய்து பார்த்தியா?
மித்ரன் : இல்லை. இது வரை ஒன்னும் செய்யலை.
இனியன் : அவங்க கொடுத்ததை நாங்க ஒழுங்கா கத்துக்கிட்டோம். தினமும் பயிற்சி எடுத்தோம், அதனால தயக்கம் இல்லாமல், தப்பு இல்லாமல் எங்களால் பேச முடியுது.
மித்ரன் : சரி, நான் அப்போ நீங்க கொடுத்த assignments எல்லாத்தையும் முடிச்சிட்டு வரேன் . எனக்கும் உங்க கூட சேர்ந்து இதே மாதிரி English-ல பேசணும்னு ஆசையா இருக்குது
இனியன், இசை : Friends, நீங்க யாராவது assignments இன்னும் செய்யாமல் இருந்தீங்கன்னா சீக்கிரம் செஞ்சிடுங்க. இன்னும் நிறைய நம்ம English-ல பாட்டி கிட்ட கேட்டு படிக்கலாம்.
Word Bank
under - கீழே, அடியில்
among - இடையில், நடுவில்
after - பிறகு, பின், பின்னர், பின்னால்
Blooming - பூக்கிறது
Crawling - தவழ்கிறது
Flying - பறக்கிறது
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்