Published : 24 Aug 2022 08:29 AM
Last Updated : 24 Aug 2022 08:29 AM

மொழிபெயர்ப்பு: May the Soul Rest in Peace

முனைவர் தி.ந.கீதா

In King Krishnadev Raya's court there were some corrupted ministers and priests who tried often to earn wealth by cheating the king. The king being a religious and conscientious person, he innocently became a prey of their foul play. But shrewd Tenali Raman desired to protect his king and at the sametime ventured to teach a lesson to the cheating courtiers. Once, King Krishnadev Raya was regretting the demise of his mother without fulfilment of her last wish to eat mangoes. Clever royal priest thought of grabbing this opportunity to earn some gold. He suggested Krishnadev Raya to plan a feast for priests of entire Vijaynagar and distribute 1 gold mango to each of them. He said, this will pacify the departed soul. King did the same.

When Tenali Raman came to know about it, he planned to teach the greedy royal priest a lesson. Few days later, he arranged a feast for all the priests of Vijaynagar. After the feast, he guided all the priest guests to his backyard where iron rods were being heated. Scared priest asked Tenali Raman what’s this nonsense? To which Tenali Raman told that his mother had severe pain in her knees. He kept on telling that an Ayurvedic doctor had advised him to punch a heated iron rod into his mother’s knee.

However, before Tenali Raman could make this happen, his mother demised. Now it is necessary to punch these heated rods into all the priests’s knees in order to pacify the departed mother. The greedy royal priest understood Tenali Raman’s gesture. Ashamed of his deed, the royal priest, along with other priests, returned the golden mangoes to the King.

ஆத்மா சாந்தி அடையட்டும்

மன்னர் கிருஷ்ணதேவ ராயரின் அரசவையில் சில ஊழல் பேர்வழி அமைச்சர்களும், மதகுருக்களும் அரசனை ஏமாற்றி செல்வம் சம்பாதிக்க அடிக்கடி முயன்றனர். மதப்பற்று மற்றும் மனசாட்சியுள்ள நபராக மன்னர் இருந்ததால், அவர் அப்பாவித்தனமாக அவர்களின் மோசமான விளையாட்டிற்கு இரையானார். புத்திசாலியான தெனாலி ராமன் தனது அரசரைக் காப்பாற்ற விரும்பினார். அதே நேரத்தில் ஏமாற்றுகாரர்களுக்கு பாடம் கற்பிக்கத் துணிந்தார்.

ஒருமுறை, மன்னர் கிருஷ்ணதேவ ராயர், மாம்பழம் சாப்பிட வேண்டும் என்கிற கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்து போன தனது தாயின் மறைவுக்கு வருந்தினார். அரசவையில் இருந்த தந்திரமான மதகுரு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொஞ்சம் தங்கம் சம்பாதிக்க நினைத்தார். விஜயநகரம் முழுவதும் உள்ள பூசாரிகளுக்கு விருந்து ஏற்பாடு செய்து, ஒவ்வொருவருக்கும் 1 தங்க மாம்பழம் வழங்குமாறு கிருஷ்ணதேவ ராயரிடம் பரிந்துரைத்தார். இதுபிரிந்த ஆத்மாவை சாந்தப்படுத்தும் என்றார் மதகுரு. அரசனும் அவ்வாறே செய்தார்.

இது தெரிய வந்ததும் தெனாலி ராமன், பேராசைக்கார மதகுருவுக்கு பாடம் கற் பிக்கத் திட்டமிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, விஜயநகரின் பூசாரிகள் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்தார். விருந்துக்குப் பிறகு, அவர் பூசாரி விருந்தினர்கள் அனைவரையும் தனது கொல்லைப்புறத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு இரும்பு கம்பிகள் சூடேற்றப்பட்டன. பயந்துபோன மதகுரு தெனாலி ராமனிடம் இது என்ன முட்டாள்தனம் என்று கேட்டார். அதற்கு தெனாலி ராமன் தனது தாயின் முழங்காலில் கடுமையான வலி இருந்ததாக கூறினார். அதற்கு ஒரு ஆயுர்வேத மருத்துவர் தனது தாயின் முழங்காலில் பழுக்கக் காய்ச்சிய இரும்பு கம்பியால் சூடு வைக்கும்படி அறிவுறுத்தியதாகக் கூறினார்.

இருப்பினும், தான் இதைச் செய்யும் முன், தனது தாயார் இறந்துவிட்டார் என்றும் மேற்கொண்டு சொன்னார். இப்போது மறைந்த தனது தாயின் ஆத்மா சாந்தியடைய இந்த சூடான கம்பிகளை அத்தனை பூசாரிகளின் முழங்கால்களிலும் வைத்தாக வேண்டும் என்றார். பேராசைக்கார மதகுரு தெனாலிராமனின் சைகையைப் புரிந்து கொண்டார். தனது செயலை நினைத்து வெட்கித் தலைகுனிந்த மதகுரு மற்ற பூசாரிகளுடன் சேர்ந்து அத்தனை தங்க மாம்பழங்களையும் அரசரிடம் திருப்பிக் கொடுத்தார்.

கட்டுரையாளர்: ஆங்கிலத் துறை முன்னாள் உதவிப் பேராசிரியர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x