கொஞ்சம் technique கொஞ்சம் English-31: எதிர் காலத்தில் ஒரு time travel

கொஞ்சம் technique கொஞ்சம் English-31: எதிர் காலத்தில் ஒரு time travel
Updated on
2 min read

இனியன், இசை: பாட்டி...நீங்க எங்களுக்கு கொடுத்த Past Perfect Continuous tense-கான complete table வீட்டுப்பாடத்தை happy-ஆ எழுதிட்டு வந்திருக்கோம். பாக்குறீங்களா?

பாட்டி: நிச்சயமா பார்க்குறேன் செல்லங்களா...அதுக்கு முன்னால Future perfect continuous tense- பத்தி Fresh-ஆ கொஞ்ச நேரம் பேசுவோமா?

இனியன் & இசை: ஓகே பாட்டி

இனியன்: பாட்டி, உங்களுக்கு ஒன்னு தெரியுமா ? ரொம்ப நாளா எங்க school ல்ல PT master இல்லை. நாங்களே சும்மா எதாவது விளையாடிட்டு இருந்தோம். இப்போ புதுசா ஒரு PT master எங்க school க்கு வரப்போறதா சொல்லிட்டு இருக்காங்க . ஒரே excitement ஆ இருக்குது.

இசை: ஆமாம் பாட்டி, உண்மைதான். அவர் நாளைக்கே school க்கு வந்து join பண்ணுறதா எங்க mam சொன்னாங்க.

இனியன் : ஹையா எனக்கு நாளைக்கு PT period இருக்குது.

இசை : வரக் கூடிய master க்கு நிறைய games தெரியுமாம். skating -ல expert ஆம் .

இனியன் : அப்போ நாளைக்கு PT period full ஆ skating பண்ணிட்டு இருப்பேன் .

பாட்டி: சந்தோஷம் குழந்தைகளே...இனியா... Future Perfect Continuous ன்னா எப்படி இருக்கும் ன்னு தெரியுமா?

இசை : பாட்டி, நான் இனியன் பேசும்போது கவனிச்சேன். அவன் இப்போ பேசினது Future Perfect Continuous .

இனியன் : நான் என்ன பேசினேன்னு இப்போ எனக்கு மறந்து போச்சு...

பாட்டி : ஒன்னும் இல்லை செல்லக்குட்டி, "நாளைக்கு PT period full ஆ skating பண்ணிட்டு இருப்பேன்" அப்படின்னு நீ சொன்னதுதான் Future Perfect Continuous .

எதிர் காலத்தில் (future ) ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் நடக்க இருக்கும் செயலைப் பற்றி பேசுவது தான் Future Perfect Continuous
I shall have been playing skating from 10 am to 11 am tomorrow.

இனியன் & இசை: வாவ் பாட்டி இது சூப்பரா இருக்கு

பாட்டி: சரி, இப்ப நீங்க எழுதிட்டு வந்த Past Perfect Continuous tense-க்கான table-ஐ காட்டுங்க பார்ப்போம்.

பாட்டி: ரொம்ப சரியாக எழுதியிருக்கீங்க செல்லங்களா...நாளை தொடர்ந்து பேசுவோம்

(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in