கொஞ்சம் technique கொஞ்சம் English-30 : Past perfect continuous tense - ஒரு time travel

கொஞ்சம் technique கொஞ்சம் English-30 : Past perfect continuous tense - ஒரு time travel
Updated on
1 min read

இனியன்: நேற்று காலையில் நிறைய நேரம் நடந்துட்டோம் பாட்டி. எனக்கு கூட கால் வலிக்குது.

இசை: ஆமாம் காலையில் ஆரம்பிச்சு மதியம் வரைக்கும் நடந்து கொண்டு இருந்தோம். எப்படி நேரம் போச்சுன்னு தெரியல.

பாட்டி: துளசி, கொத்தமல்லி எல்லாம் சேர்த்து சுக்கு காபி சூடா போட்டிருக்கிறேன். குடிங்க, கொஞ்சம் இதமா இருக்கும்.

இசை thanks பாட்டி.

பாட்டி: உங்களுக்கு ஒன்னு தெரியுமா, அடுத்த topic-ஐ நீங்க இப்போ எடுத்துக் கொடுத்துட்டீங்க.

இனியன்: நாங்களா...எப்போ? எப்படி?

இசை: என்ன சொன்னோம்னு தெரியலையே.

பாட்டி: நேற்று காலையில் நடந்தை பற்றி என்கிட்ட என்ன சொன்னீங்க? திருப்பி சொல்லுங்க.

இசை: காலையில் இருந்து மதியம் வரை நடந்து கொண்டு இருந்தோம்ன்னு சொன்னோம்.

பாட்டி: அதுதான் இப்போ நாம பார்க்கப் போகிற topic. Past perfect continuous tense

இசை: பாட்டி, எனக்கு புரியுது. past perfect continuous tense என்பது இறந்த காலத்தில் (past) ஒரு குறிப்பிட்ட time period-ல் நடந்த சம்பவத்தை பற்றி பேசுவதுன்னு வச்சுக்கலாமா.

பாட்டி : சரியாக சொன்ன இசை. அதேதான். easy-ஆ கத்துக்கிட்டீங்களே.

பாட்டி : அந்த time periodக்கு ஒரு ஆரம்பம் இருக்கும், ஒரு முடிவும் இருக்கும். அந்த மாதிரி situation-ல தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் செயலை past perfect continuous-ல் சொல்ல வேண்டும்.

இசை : வழக்கம்போல perfect tense-க்கு பயன்படுத்தக் கூடிய had என்கிற keyword இங்கே வரும்

இனியன் : அப்புறம் continuous tense-க்காக been சேர்ப்போம்.

பாட்டி : இதற்கான Formula சொல்லுங்க பாப்போம் இசை, இனியன் : subject had been verb ing

பாட்டி : நேற்று நம்ம walking போனதை பற்றி இப்போ English-ல சொல்லுங்க பார்க்கலாம்.

இசை : We had been walking from morning to afternoon.

பாட்டி: அவ்வளவுதான், சரியா விஷயத்தை புடிச்சிட்டீங்க. அடுத்து drink வச்சு complete table எழுத முயற்சி பண்ணிட்டு வரீங்களா?

இசை, இனியன் : ஓகே பாட்டி அப்படியே செய்கிறோம்

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in