

இனியன்: பாட்டி பாட்டி, கொஞ்சம் அப்படியே walking போயிட்டு வரலாமா?
பாட்டி: சரி டா செல்லம். இசையையும் கூப்பிடு. நம்ம எல்லாருக்கும் கொஞ்சம் refreshing-ஆ இருக்கும்.
இனியன்: இங்கே பாருங்க, வாழைத்தண்டு சூப் வச்சிருக்காங்க. எல்லாரும் குடிக்கலாம்.
இசை: பாட்டி, இங்கே ஒரு இடம் இருக்குது பாருங்க. இந்த இடத்தில் நம்ம கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டே பேசுவோம்.
பாட்டி: சரிடா செல்லம்.
இசை: பாட்டி, உங்களுக்கு ஒன்னு தெரியுமா, இப்போ எனக்கு tense நல்லா தெரியுது.
பாட்டி: very good. English படிக்கிறது very easy-ன்னு இப்போ புரிஞ்சிருக்குமே.
இனியன்: yes பாட்டி
பாட்டி: இன்னும் ஒரு tense பாக்கி இருக்குது
இசை: perfect continuous tense.
பாட்டி: இதில் ஒன்னு கவனிச்சீங்களா
இசை: perfect-ம் continuous-ம் சேர்ந்து வருது.
பாட்டி: correct. continuous எப்போ பயன்படுத்துவோம்?
இசை: ஒரு செயல் நடைபெற்று கொண்டு இருக்கிறதை சொல்ல continuous tense-ஐ பயன்படுத்துவோம்.
பாட்டி: perfect எப்போ வரும்?
இசை: ஒரு செயல் நடந்திருக்கிறதை குறிப்பதற்கு பயன்படுத்துவோம்.
பாட்டி: அப்படின்னா, இரண்டும் சேர்ந்தால்?
நம்ம "கொஞ்சம் technique கொஞ்சம் English " எவ்வளவு நாளா படிச்சிட்டு இருக்கிறோம் சொல்லுங்க?
இனியன் & பாட்டி: ஜூலை 1 -லிருந்து பாட்டி.
பாட்டி: இந்த இடத்தில்தான் perfect continuous வருகிறது. இதனை நாம எப்படி சொல்ல வேண்டும் தெரியுமா?
இனியன் & இசை: சொல்லித் தாங்க பாட்டி
பாட்டி: I have been studying English since July 1st. தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற அல்லது நடந்து கொண்டிருக்கிற ஒரு செயலை ஒரு குறிப்பிட்ட காலத்துடன் இணைத்து சொல்வதற்கு perfect continuous ஐ பயன்படுத்த வேண்டும்
பாட்டி: இப்போ நீங்க ஒரு example சொல்லுங்க பார்க்கலாம்.
இசை: I have been walking since morning 6 am
இனியன்: We have been reading since morning 6 am
பாட்டி: இதில் since என்கிற word -ஐ time period பற்றி குறிக்க பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட காலம் மற்றும் நேரத்தில் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் பொழுது ‘since’ பயன்படுத்த வேண்டும்.
இசை: அப்போ இங்கே subject + have been + verb + ing தான் formulaவா?
பாட்டி: ஆமாம். இதற்கு பெயர் Present perfect continuous. மேற்கொண்டு நாளை பேசுவோம்
இனியன் & இசை: ஓகே பாட்டி
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்
முந்தைய அத்தியாயம்: கொஞ்சம் technique கொஞ்சம் English - 27: Perfect Tense திருப்புதல் நேரம்!