கொஞ்சம் technique கொஞ்சம் English-25: ஒற்றுமை என்னெவன்று தெரிகிறதா?

கொஞ்சம் technique கொஞ்சம் English-25: ஒற்றுமை என்னெவன்று தெரிகிறதா?
Updated on
1 min read

பாட்டி: நான் english பேசியிருப்பேன்னு சொல்லுறதைத்தான் future perfect என்று சொல்வார்கள் அப்படியென்று நேற்று சொன்னேன். நினைவிருக்கா இனியா?

இனியன்: ஆமா பாட்டி...அது எப்படியென்று நான் கேட்டேனே? இப்போ சொல்றீங்களா?

பாட்டி: நிச்சயமா சொல்றேன் செல்லம்... இசை நீயும் கவனிக்கிறாயா?

இசை: ஆமா பாட்டி, அதைவிட எனக்கு வேறென்ன வேலை

பாட்டி: சமத்து பசங்கடா...சரி இங்க பாருங்களேன்...

I shall have drunk water - நான் தண்ணீர் குடித்திருப்பேன்

We shall have drunk water - நாங்கள் தண்ணீர் குடித்திருப்போம்

You will have drunk water - நீ/ நீங்கள் தண்ணீர் குடித்திருப்பாய் / குடித்திருப்பீர்கள்

He will have drunk water - அவன்/அவர் தண்ணீர் குடித்திருப்பான் /குடித்திருப்பார்

She will have drunk water - அவள் தண்ணீர் குடித்திருப்பாள்

It will have drunk water - அது தண்ணீர் குடித்திருக்கும்

They will have drunk water - அவர்கள் தண்ணீர் குடித்திருப்பார்கள்

குடித்திருக்கிறேன் என்பது present perfect tense

குடித்திருந்தேன் என்பது past perfect tense

குடித்திருப்பேன் என்பது future perfect tense

இசை: புரியுது பாட்டி

பாட்டி: இங்கு future perfect sentence-ல் ஒரு ஒற்றுமை இருக்கிறது. என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா?

இனியன்: “யிரு” என்கிற வார்த்தை எல்லா sentenceலையும் future tense format-ல் இருக்கு பாட்டி.

இனியன்: அப்போ, “யிரு”தான் keyword ஆ?

பாட்டி: correct ஆ கண்டுபிடிச்சிட்டீங்களே. very good.

அப்போ இதற்கு formula இதுதானே

Subject will or shall have past participle

ஆமாம், கண்டு பிடிச்சாச்சு

இனியன்: friends, நீங்களும் eat வச்சு future perfect tense எழுதிட்டு வந்துடுங்க. நாளைக்கு பார்க்கலாம்.

Fill in the blanks

I shall have eaten cake

We ______________________________

You ______________________________

He ______________________________

She ______________________________

It ______________________________

They ______________________________

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in