கொஞ்சம் technique கொஞ்சம் English-24: Future Perfect tense-ஐ இன்று பார்ப்போமா?

கொஞ்சம் technique கொஞ்சம் English-24: Future Perfect tense-ஐ இன்று பார்ப்போமா?
Updated on
1 min read

பாட்டி: past perfect sentence-ல் ஒரு ஒற்றுமை இருக்குனு சொல்லி அதை யோசிச்சுட்டு வர சொன்னேனே... யாரு தயாரா இருக்கீங்க?

இனியன்: “யிருந்து” என்கிற வார்த்தை எல்லா sentenceலையும் இருக்கு பாட்டி. அப்போ, “யிருந்து”தான் keyword-ஆ?

பாட்டி: correct ஆ கண்டுபிடிச்சிட்டியே. very good.

இனியன் & இசை: அப்போ இதுக்கு formula : Subject + had + past participle. சரிதானே பாட்டி?

பாட்டி: மிகச்சரி...

இனியன் & இசை: ஹே ஜாலி!!!

பாட்டி: சரி... ரெண்டு பேரும் நல்லா சாப்பிட்டு வாங்க. அடுத்து, Future Perfect tense ஐ இன்னைக்கு பார்ப்போம்.

இனியன்: பாட்டி, future perfect tense-லும், இப்படி “யிரு” என்கிற வார்த்தை இருக்குமா?

பாட்டி: சாப்பிட்டுகிட்டே பேச வேண்டாம் இனியா. நீங்க இரண்டு பேரும் பொறுமையா நல்லா சாப்பிட்டு முடிச்சிட்டு வாங்க. இன்னும் விளக்கமாக பேசலாம்.

இனியன் : சரிங்க பாட்டி. சாப்பிட்டு முடிச்சுட்டோம். இப்போ சொல்லுங்க. நாங்க தயாரா இருக்கிறோம். நீங்க சொன்னது சரி தான். future perfect லும் “யிரு” வரும்.

பாட்டி: அடிக்கடி நீ ஒன்னு சொல்லுவியே, அதை சொல்லேன்.

இனியன்: ஓ அதுவா பாட்டி, என்னை மட்டும் english medium schoolல சேர்த்திருந்தா, நான் நல்லா English பேசியிருப்பேன்.

பாட்டி: இங்க நீ ஒன்னு கவனிச்சியா நீ பேசினது future perfect tense தெரியுமா

இனியன் : அப்படியா, அதுவே எனக்கு தெரியாது. எப்படி சொல்லுறீங்க? நான் English பேசியிருப்பேன்னு சொல்லுறதைத் தான் future perfect என்று சொல்வார்கள்.

இனியன்: அப்படியா...

பாட்டி: ஆமா... தொடர்ந்து பேசுவோம்

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in