கொஞ்சம் technique கொஞ்சம் English - 21: எது வந்தால் perfect tense உருவாகும்?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 21: எது வந்தால் perfect tense உருவாகும்?
Updated on
1 min read

இனியன்: Present continuous tense-க்கு ‘கொண்டு’ என்கிற keyword ஐ கத்துகிட்டோம். இப்ப perfect tense-க்கு என்ன keyword வரும்னு தெரிஞ்சிக்க ஆவலா இருக்கு பாட்டி.

பாட்டி: verb table-ல நீங்க ரெண்டு பேரும் படிச்சீங்க இல்லையா? அதில் past participle என்ற ஓன்று வரும். ஞாபகம் இருக்கா?

இனியன்: ஆமாம் பாட்டி. eat ate eaten இல் eaten என்பது past participle.

பாட்டி: சரியாக சொன்ன இனியா. அந்த past participleதான் perfect tense-க்கு உதவியா இருக்கப் போகுது.

உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீ சென்னைக்கு போயிருக்கிறாயா இசை?

இசை: ஆமாம் பாட்டி, சென்னைக்கு பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரிக்கு கூட போயிருக்கிறேன். ஏன் இப்படி கேட்கிறீர்கள்?

பாட்டி: கொஞ்சம் பொறு, மற்றுமொரு கேள்வியும் இருக்கு. நேத்து நீ சென்னைக்கு போனாயா?

இனியன்: இல்லையே பாட்டி, நான் வீட்டில் உங்களுடன்தானே இருந்தேன். பள்ளிக்கூடத்துக்குதான் போனேன். எதனால் இப்படி கேட்கிறீங்க?

பாட்டி: இரண்டு பேரும் சற்று உற்று கவனியுங்கள். நான் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்டேன். ஓன்று சென்னைக்கு போயிருக்கிறாயா, இரண்டாவது சென்னைக்கு போனாயா என்றும் கேள்விகள் கேட்டேன். உங்களது பதில்,

1. நான் சென்னைக்கு போயிருக்கிறேன்

2. நேற்று நான் பள்ளிக்கு போனேன்

பாட்டி: இதில் முதலில் வருவது present perfect tense. இரண்டாவது வருவது past tense.

இசை: பாட்டி எனக்கு இப்போது புரிகிறது.

பாட்டி: ஒரு குறிப்பிட்ட time period யில் நடந்தால், அதற்கு பெயர் past tense .

பாட்டி: இப்படி ஒரு குறிப்பிட்ட time period -க்குள் மட்டுமே அடக்கி விடமுடியாத, நடந்து முடிந்த ஒன்றை நிகழ்காலத்தில் (present tense) குறிப்பிடுவதற்கு present perfect என்று சொல்லலாம்.

past perfect என்றால் நடந்து முடிந்த ஒன்றை இறந்த காலத்தில் (past tense) சொல்வது என்று சொல்லலாம்.

இனியன்: Future perfect என்றால் நடந்து முடிந்துஇருக்கும் என்று எண்ணக் கூடிய ஒன்றை எதிர்காலத்தில் (future tense) சொல்வது என்று சொல்லலாம்.

கிட்டத்தட்ட உங்களுக்கு புரிந்து விட்டது. இன்னமும் கூட இருக்கிறது.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in