கொஞ்சம் technique கொஞ்சம் English - 19: எதை நினைக்கிறோமோ அது தானா நடக்குதே!

கொஞ்சம் technique கொஞ்சம் English - 19: எதை நினைக்கிறோமோ அது தானா நடக்குதே!
Updated on
2 min read

இசை & இனியன்: நேற்று நீங்க சொன்னபடி past continuous tense-ல எழுதிட்டு வந்திருக்கோம் பாட்டி. இங்க பாருங்க
I was drinking water - நான் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தேன்
We were drinking water - நாங்கள் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தோம்
You were drinking water – நீ (நீங்கள்) தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தாய் (இருந்தீர்)
He was drinking water – அவன் (அவர்) தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தான் (இருந்தார்)
She was drinking water - அவள் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தாள்
It was drinking water - அது தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தது
They were drinking water - அவர்கள் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தார்கள்

பாட்டி: Very good செல்லங்களா, உங்களுடைய friends கிட்டயும் இதை சொல்லிடுங்க.

இசை&இனியன்: சரிங்க பாட்டி

இனியன்: பாட்டி, இந்த continuous tenseல வரக் கூடிய “கொண்டு” என் மனசுல நல்லா பதிஞ்சிடுச்சு. School ல்ல வச்சு evening நம்ம என்ன செய்வோம் அப்படின்னு யோசிச்சிட்டு இருந்தேன்.

பாட்டி: வேற என்னெல்லாம் நினைத்தாய்?

இனியன்: வீட்ல இருக்கிற சாப்பாடை சாப்பிட்டுக்கிட்டே உங்ககிட்ட கதை கேட்கலாம்னு நினச்சேன் பாட்டி.

பாட்டி: இங்க பாருங்களேன். உங்களுக்கு ஒரு surprise. எப்போ நாம ஒரு செயலில் தீவிரமா இருங்குறோமோ, அது சார்ந்த விஷயங்கள் தானாகவே நடக்க ஆரம்பிக்கும்.

இனியன்: பாட்டி, நீங்க சொல்லுறது புரியுது. ஆனால், இப்போ என்ன நடந்தது?

பாட்டி: நீ school ல்ல evening என்ன பண்ணிட்டு இருப்போம் ன்னு யோசிச்சேல்ல. அதற்கு பெயர்தான் future continuous tense.

இனியன்: பாட்டி, நல்லா இருக்குதே கேட்க...

பாட்டி: school-ல்ல நினைத்ததில் எங்கே எல்லாம் future continuous tense வரும்ன்னு சொல்லுங்க பாப்போம்.

இசை: சாப்பிட்டுக் கொண்டு இருப்பேன் கதை கேட்டுக் கொண்டு இருப்பேன்வந்து கொண்டு இருப்பேன் பேசிக் கொண்டு இருப்பேன்

பாட்டி: அருமை ...அப்படின்னா, இந்த நேரத்தில் நீங்க formula வும் கண்டு பிடிச்சிருப்பீங்களே

இசை : ஆமாம் பாட்டி! இங்க பாருங்க

I / We + shall be + verb + ing
You / He / She / It / They + will be + verb + ing

இனியன்: பாட்டி, நான் future continuous tense-க்கு sentences எழுதிட்டு வந்துட்டேன். பாருங்க

I shall be drinking water - நான் தண்ணீர் குடித்துக் கொண்டு இருப்பேன்
We shall be drinking water - நாங்கள் தண்ணீர் குடித்துக் கொண்டு இருப்போம்.
You will be drinking water – நீ (நீங்கள்) தண்ணீர் குடித்துக் கொண்டு இருப்பாய் (இருப்பீர்கள்)
He will be drinking water – அவன் (அவர்) தண்ணீர் குடித்துக் கொண்டு இருப்பான் (இருப்பார்)
She will be drinking water - அவள் தண்ணீர் குடித்துக் கொண்டு இருப்பாள்
It will be drinking water - அது தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கும்
They will be drinking water - அவர்கள் தண்ணீர் குடித்துக் கொண்டு இருப்பார்கள்

பாட்டி: Very good இனியா. இரண்டு பேரும் அருமையா புரிஞ்சுகிறீங்க

இசை: Thanks பாட்டி.

(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in