

பாட்டி: book fair க்கு போயிட்டு வந்தாச்சா? என்ன புத்தகங்கள் எல்லாம் வாங்கியிருக்கிறீங்க?
இனியன்: பாட்டி முதல்முறையா இப்போதான் book fair க்கு போகிறேன். Books store இருக்கும், அப்படியே நமக்கு வேண்டிய புத்தகத்தை வாங்கிட்டு வந்திடலாம்னுதான் நினைச்சேன்.
பாட்டி: ம்ம்... அப்புறம்!
இனியன் : ஆனால், பாருங்க திருவிழா கூட்டம். இவங்களே எல்லா புத்தகத்தையும் எடுத்துக்கிட்டா நமக்கு கிடைக்காதேனு பயந்து போயி, வேகமா ஓடி இத்தனை கதை புத்தகங்கள் வாங்கிட்டு வந்துட்டேன்.
பாட்டி : க்கிகிகிகிகி
இனியன் : ஏன் பாட்டி சிரிக்கிறீங்க?
பாட்டி : நீ புத்தகம் வாங்கினது மகிழ்ச்சி இனியா. புத்தகங்கள் எல்லாம் தீர்ந்து போனால் கூட, பணம் செலுத்திட்டு, நம்மோட முகவரியை கொடுத்தா புத்தகத்தை அனுப்பிவைப்பாங்க
இனியன் : அப்படியா பாட்டி! இது எனக்கு புதிய தகவல்.
பாட்டி : இப்போ நீ நடந்து முடிந்த ஒன்றை அது நடந்த நேரத்திற்கே போய் சொன்னாய் அல்லவா. இதற்கு பெயர்தான் past continuous tense. நீ சொன்ன sentence-ஐ இன்னும் விளக்கமா சொன்னீனா அங்கும் ‘கொண்டு’ என்கிற word வரும்.
இசை : அட ஆமாம் பாட்டி .
வாங்கிக் கொண்டு இருந்தேன்
தேடிக் கொண்டு இருந்தேன்
நடந்து கொண்டு இருந்தேன்
பார்த்துக் கொண்டு இருந்தேன்
-ன்னு சொல்ல முடியுது.
பாட்டி: correct. இந்த past continuous tense-க்கு formula என்னன்னு கண்டுபிடிச்சீங்களா?
இசை : Subject past be verbs verb ing
பாட்டி: very good. அப்படியே நேத்து பார்த்த எல்லாத்தையும் மாற்றி கொண்டு நாளை வரீங்களா
இசை & இனியன் : சரிங்க பாட்டி அப்படியே செய்கிறோம்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்