

இனியன்: பாட்டி book fair போறேன். அங்க என்ன English book வாங்கலாம்?
பாட்டி: முதல்ல ஒரு சிறிய கதைப் புத்தகம் வாங்கி படி இனியா...
கதையான்னு நினைக்காத. படிக்க ஆரம்பி. அப்புறம் உனக்கே புரியும்.
இனியன்: சரி பாட்டி. அம்மா எனக்குன்னு கொடுத்த 50 ரூபாயில கதைப் புத்தகங்கள் வாங்கிட்டு வரேன்.
இசை : இப்படி நடந்துகொண்டு இருக்கிற ஒரு சம்பவத்தைப் பற்றி பேசுறதை continuous tense ன்னு சொல்லுவாங்கதானே பாட்டி?
பாட்டி: ஏற்கெனவே பார்த்த tense sentence-ஐ present continuous tense-ற்கு மாத்திப்பாருங்க
I am drinking water - நான் தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறேன்
We are drinking water - நாங்கள் தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறோம்
You are drinking water – நீ (நீங்கள்) தண்ணீர்குடித்துக் கொண்டு இருக்கிறாய் (இருக்கிறீர்கள்)
He is drinking water - அவன் (அவர்) தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறான் (இருக்கிறார்)
She is drinking water - அவள் தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறாள்
It is drinking water - அது தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறது
They are drinking water - அவர்கள் தண்ணீர் குடித்துக் கொண்டு இருக்கிறார்கள்
பாட்டி: நாம ஏற்கெனவே பார்த்த be verbs உடன் ing verbs ஐ சேர்த்தால் continuous tense உருவாகிவிடும். இங்க உள்ள எல்லா sentence-யும் நீங்க நல்லா வாசிச்சா ஒரு common word தெரிய வரும்.
இசை: நானும் அதனை பார்த்தேன் பாட்டி. கொண்டு என்கிற word எல்லா sentenceலும் வருகிறது .
பாட்டி : மிகவும் சரி இசை. தமிழில பிரித்து எழுதும் போது verb ற்கு பின்னால "கொண்டு" என்ற வார்த்தை வருதுனா, அதனை continuous tense sentence-னு உறுதியா சொல்லிடலாம்.
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்