கொஞ்சம் technique கொஞ்சம் English-15: இன்னும் ing -ல் இவ்வளவு இருக்குதா?

கொஞ்சம் technique கொஞ்சம் English-15: இன்னும் ing -ல் இவ்வளவு இருக்குதா?
Updated on
1 min read

இனியன்: பாட்டி, இங்க பாருங்க. எல்லா verbs க்கும் நாங்க ing-ஐ சேர்த்து எழுதிட்டு வந்துட்டோம்.

பாட்டி: நானும் உங்களுக்காக எழுதிட்டு வந்திருக்கிறேன்.

இங்க பாருங்க... நீங்க எழுதியிருக்கிற spelling-கும் நான் எழுதியிருக்கிற spelling-கும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்குதா?

இசை: ஆமாம் பாட்டி, ஏன் இந்த verb க்கு last letter ஐ இன்னொரு தடவை சேர்த்து எழுதி வச்சிருக்கிறீங்க.

இனியன்: confuse பண்ணுறாங்கப்பா...

பாட்டி: confuse எல்லாம் இல்லை குட்டி. சில அடிப்படைகளை நாம் முதலிலே சரியாக புரிஞ்சிக்கிட்டோம்னா நமக்கு பிரச்சினை இல்லை.

இசை: சரி சொல்லுங்க கேட்கிறோம்.

பாட்டி: உங்களுக்கு English alphabets-ல்vowel, consonant அப்படின்னா என்னன்னு தெரியும்தானே?

இனியன்: நல்லாவே தெரியும் பாட்டி. மொத்தம் இருக்கிற 26 alphabets-ல் a, e, i , o, u என்கிற 5 letters ஐயும் vowel ன்னு சொல்லுவோம். மற்ற 21 letters ஐயும் consonants ன்னு சொல்லுவோம்.

பாட்டி: Consonant - vowel- consonant என்று ஒரு verb முடியுதுன்னு வச்சுக்கோங்க. அப்புறம் அந்த கடைசி letter-க்கு ஒரு அழுத்தம் கொடுத்து நீங்க உச்சரிக்கிறீங்க. இந்த மாதிரி இடத்திலெல்லாம் கடைசி consonant letter ஐ இரண்டு தடவை எழுத வேண்டும்.

கொஞ்சம் குழப்புவது போல உங்களுக்கு தெரியலாம். நிறைய verbs பயன்படுத்த ஆரம்பிக்கும் பொழுது இதெல்லாம் பழக்கத்தில் வந்துவிடும். இப்போதைக்கு ஒரு referenceற்கு இந்த table-ஐ பயன்படுத்திக்கோங்க.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in