கொஞ்சம் technique கொஞ்சம் English - 14: சொல்லோட இப்படியும் ing சேர்க்கலாமா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 14: சொல்லோட இப்படியும் ing சேர்க்கலாமா?
Updated on
1 min read

இசை: பாட்டி, நம்ம ingல ஆரம்பிச்சது...

இனியன்: எங்கே வந்துட்டோம்...

பாட்டி: ingகே ஆரம்பிச்சு எங்கே வந்துட்டோமா ...rhyming நல்லா வருதே...

(மூவரும் சிரித்தனர்)

பாட்டி: இப்போ நம்ம ing தான் பார்க்க போகிறோம் தெரியுமா.

இனியன்: ஹே...continuous tense... continuous tense (இனியன் மகிழ்ச்சியில் கத்தினான்)

பாட்டி: நல்ல ஞாபக சக்தி இனியா உனக்கு. Continuous tense யையும் present, past, future என்று மூன்று வகையில் நம்மால் சொல்ல முடியும் என்பது உங்களுக்கும் தெரியும்.

இசை: ஆமாம் பாட்டி

பாட்டி: இந்த continuous tense-ல, be verbs ஆனது verbகூட சேர்ந்து வரும். அப்புறம் verb கூட நாம ing -ஐ சேர்த்து சொல்லுவோம் .

நான் இப்போ verb சொல்லுறேன். நீங்க ing சேர்த்து சொல்லுங்க சரியா.

இசை:

Walk - walking

Go - going

Sleep - sleeping

Eat - eating

Jump - jumping

பாட்டி: Super ஆ சொல்லிட்டிங்க. இங்க e முடியுற verb இல் ing சேர்க்கும் பொழுது ஒரு சின்ன மாற்றம் நம்ம செய்ய வேண்டியிருக்குது.

இசை: என்ன பாட்டி?

பாட்டி: e வரக் கூடிய verb இல், e ஐ நீக்கி விட்டு ing ஐ சேர்க்க வேண்டும்.

இனியன்: ஓ! அப்படியா?

பாட்டி: இங்க பாருங்களேன்.

Dance - dancing

Write - writing

Wake - waking

Come - coming

இதில் be மட்டும் exceptional. அதில் உள்ள e யை நீக்காமலே ing சேர்த்துக்கிடுவோம்

be - being

இனியன்: சரி பாட்டி

பாட்டி: இந்த இரண்டு type உள்ள ing format மட்டும் இன்று போதும். இதே போல நிறைய format யில் ing இருக்கிறது. அதை பிறகு ஒரு நாள் பார்க்கலாம்.

இசை: friends, ஏற்கெனவே நாம பார்த்த verbs-ல் நாங்க ing -ஐ சேர்த்து எழுதப் போறோம். நீங்களும் எழுதிட்டு வாங்க. நாளை பார்க்கலாம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in