கொஞ்சம் technique கொஞ்சம் English - 13: அப்போ verb இன்னும் நிறைய இருக்குதா?

கொஞ்சம் technique கொஞ்சம் English - 13: அப்போ verb இன்னும் நிறைய இருக்குதா?
Updated on
1 min read

இசை: பாட்டி...ஒரு verbs table நீங்க கொடுத்தீங்கள்ல. அதை வெச்சு நாங்க தமிழ் அர்த்தம் கண்டுபிடிச்சு விளையாடினோம்.

பாட்டி: super செல்லம்.

இனியன் : அந்த table கூட எங்களுக்கு நல்லா மனசுல பதிஞ்சிடுச்சு. நீங்க கேளுங்க, நாங்க சொல்லுறோம்.

பாட்டி: சரி... come

இனியன்: Come - came - come

பாட்டி: Buy

இசை: Buy - bought - bought

பாட்டி: Bring

இனியன்: Bring - brought - brought

பாட்டி: Cook

இசை: Cook - cooked - cooked

பாட்டி: Sleep

இனியன்: Sleep - slept - slept

பாட்டி: Write

இசை: Write - wrote - written

பாட்டி: Take

இனியன்: Take - took - taken

பாட்டி: Go

இசை: Go - went - gone

பாட்டி: அருமையா படிச்சிருக்கீங்களே. மகிழ்ச்சியா இருக்கு. இதே போல ஆயிரக்கணக்கான verbs இருக்கு.

இனியன்: (ஆச்சரியத்துடன்) அப்படியா பாட்டி!

பாட்டி: நீங்க என்ன செய்யணும்னா, ஓவ்வொரு தடவை புதுசா எதாவது verb கேள்விப் பட்டீங்கன்னா, அதையும் இந்த table கூட சேர்த்து எழுதிகிட்டே வாங்க.

இனியன்: அப்போதான், தைரியமா பேசலாம்.

இசை: நிறைய கேள்விகள் கூட கேட்கலாம்.

பாட்டி: நிறைய எழுத கூட செய்யலாம். extra verbs கொஞ்சம் உங்களுக்காக இங்கே நான் எழுதி வச்சிருக்கிறேன். நீங்களும் படிச்சிட்டு, உங்க friends யையும் படிக்க சொல்லிடுங்க.

இசை: Friends, நீங்களும் எங்க கூட சேர்ந்து இந்த new verb table-ஐ மனப்பாடம் செஞ்சு வச்சுக்கோங்க. நாளைக்கு பார்க்கலாம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in