கொஞ்சம் Technique கொஞ்சம் English - 8: இன்னைக்கு Simple present tense!

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 8: இன்னைக்கு Simple present tense!
Updated on
2 min read

இனியன்: பாட்டி, இந்த Sunday பூங்காவுக்கு நாம தான் முதலில் வந்திருக்கிறோம்னு நினைக்கிறேன் .

இசை: பூங்காவிலேயே உட்கார்ந்து வாசிக்கலாம்னு புதிதாக வந்த புத்தகங்களை நான் எடுத்துட்டு வந்திருக்கிறேன் பாட்டி.

பாட்டி: அப்படியே இந்த நீண்ட இருக்கையில் அத்தனை புத்தகங்களையும் பரப்பி வச்சிடு இசை. வழக்கம்போல குழந்தைகள் எடுத்து படிச்சிட்டு திருப்பி வச்சிட்டு போகட்டும் .

இசை: சரி பாட்டி

இனியன்: present tense என்று இப்போது பூங்காவில் நடந்து கொண்டு இருக்கிறதை சொல்லலாமா?

பாட்டி: சொல்லலாம். இன்னும் சரியா சொல்லணும்னா present continuous tense என்றுதான் சொல்லணும்.

இசை: ஓகே...இரண்டாவதாக வந்த present tense இது... அப்போ முதலில் என்ன வந்தது என்று நான் யோசிக்கிறேன். (சிறிது யோசனைக்குப் பின்)simple present tense தானேபாட்டி? இதைப் பற்றி விளக்கமாக சொல்லுங்க.

பாட்டி: நிகழ் காலத்தில் உள்ள பழக்கவழக்கங்கள், மாற்றமுடியாத கருத்துக்கள், பொதுவான உண்மைகள், கால நேர அட்டவணை சார்ந்த நிகழ்வுகள் எல்லாம் simple present tense-ல்தான் சொல்லணும்.

இனியன்: Simple present tense ஆ ?

பாட்டி: ஆமாம். subject simple present verb என்பதே இதற்கான பொதுவான formula.

இதில் 3rd person singular subjects ற்கு மட்டும் verb உடன் s அல்லது es சேர்த்து சொல்லணும்.

இசை: example சொல்லுங்களேன் பாட்டி

பாட்டி : I drink water - நான் தண்ணீர் குடிக்கிறேன்

We drink water - நாங்கள் தண்ணீர் குடிக்கிறோம்

You drink water – நீ/ நீங்கள் தண்ணீர் குடிக்கிறாய்/குடிக்கிறீர்கள்

He drinks water - அவன்/அவர் தண்ணீர் குடிக்கிறார்

She drinks water - அவள் தண்ணீர் குடிக்கிறாள்

It drinks water - அது தண்ணீர் குடிக்கிறது

They drink water - அவர்கள் தண்ணீர் குடிக்கிறார்கள்

இங்கு He / She / It என்கிற subject ஐ பாருங்க. verb உடன் கூடுதலாக s என்கிற எழுத்தை சேர்த்து இருக்கிறோம் .

இனியன்: ஆமாம் பாட்டி , I / We / You / They ஆகிய subject ற்கு drink என்றும் He / She / It என்கிற subject ற்கு drinks என்றும் சொல்லியிருக்கிறீங்க .

பாட்டி: Wow! இனியா, சரியா கண்டு பிடிச்சிட்டியே. உனக்கு இப்போ simple present tense formula புரிஞ்சதா?

இனியன்: Yes பாட்டி...

பாட்டி: I like cake. I என்கிற subject ஐ வைத்து, ஒரு sentence உங்களுக்காக நான் இங்கே கொடுத்திருக்கிறேன். மீதமுள்ள மற்ற subject ஐ பயன்படுத்தி நீங்க எழுதிட்டு வாங்க .

நாளை பார்க்கலாம்.

Fill in the blanks

I like cake

We __________________________

You __________________________

He __________________________

She __________________________

It __________________________

They __________________________

Word Bank

பூங்கா – park

நீண்ட இருக்கை - bench

பழக்கவழக்கங்கள் - habits

பொதுவான உண்மைகள் – general facts

கால நேர அட்டவணை – timetable

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in