கொஞ்சம் Technique கொஞ்சம் English - 7: செயலை காலத்தோடு செல்வதே Tense!

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 7: செயலை காலத்தோடு செல்வதே Tense!
Updated on
1 min read

இனியன்: பாட்டி, விடுமுறை என்றால் சீக்கிரமே எந்திருச்சிடுறேன். School daysல, காலையில் எந்திரிக்க சிரமமா இருக்குது.

பாட்டி: உனக்கு மட்டும் இல்லை office க்கு போகிற உங்க அப்பா, அம்மாவும் இப்படிதான் இருக்காங்க. பாரு, உனக்கு முன்னாடியே எந்திருச்சு வீட்டை சுத்தம் பண்ணிட்டு இருக்கிறாங்க பாரு .

இனியன்: ஆமாம் (கிகிகிகி) .

இனியன்: இசை எங்கே பாட்டி?

இசை: இதோ இங்கேதான் இருக்கேன். அப்பாவுக்கு உதவியாய் இருந்தேன் .

இசை: பாட்டி, verbs படிச்சிட்டு வந்தால், tense கத்துக்கொடுப்பேன் என்று சொன்னீங்க. 50 verbs நாங்க படிச்சிட்டோம் .

பாட்டி: Very good Dear! நமது செயல்களை காலத்துடன் இணைத்து சொல்வதற்கு ஒரு கருவியாக இருப்பதுதான் tense .

இனியன்: காலம் என்றால் என்ன பாட்டி?

பாட்டி: ஒரு செயல் எப்பொழுது நடைபெறுகிறது என்பதை பற்றி சொல்வதைத் தான் காலம் என்று சொல்லுவோம் ..

நேற்று செய்ததையும், இன்று செய்வதையும், நாளை செய்யப் போகிறதையும் வேறு வேறு முறையில் தமிழில் சொல்கிறோம் அல்லவா. அதேபோல ஆங்கிலத்தில் சொல்வதற்கும் முறை இருக்கு.

இனியன்: இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்க பாட்டி.

பாட்டி: நேற்று நடந்த செயலை past tense என்று சொல்லுவோம்

இன்று நடக்கிற செயலை present tense என்று சொல்லுவோம்

நாளை நடக்க இருக்கிற செயலை future tense என்று சொல்லுவோம்

இங்கே ஒவ்வொரு tense ஐயும் இன்னும் நான்கு விதமாக பிரித்துக் காட்ட முடியும் . கொஞ்சம் கவனமாக கேளுங்க

Present tense-ல்

1. Simple present tense

2. Present continuous tense

3. Present perfect tense

4. Present perfect continuous tense.

அதே போல Past tense-ல்,

1. Simple past tense

2. Past continuous tense

3. Past perfect tense

4. Past perfect continuous tense

இறுதியாக Future tense-ல்,

1. Simple future tense

2. Future continuous tense

3. Future perfect tense

4. Future perfect continuous tense

இனியன்: பாட்டி, அப்போ மொத்தம் 12 வகைகளில் tense இருக்குதா?

பாட்டி: ஆமாம் குட்டி, ஒவ்வொன்றையும் உங்களுக்கு எளிதாக புரிய வைக்கிறது தான் என்னுடைய முதல் வேலை. நாளையிலிருந்து தினமும் ஒவ்வொன்னா பார்க்கலாம்.

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in