

பாட்டி: என்ன காலையிலே சீக்கிரம் எழுந்துட்டீங்க (சிரித்துக் கொண்டே கேட்டார் பாட்டி )
இனியன்: 50 verbs-ம் நேற்றே படித்து முடித்துவிட்டோம் பாட்டி. மீண்டும் ஒரு தடவை recall செய்யலாம் என்று சீக்கிரமாக எழுந்துவிட்டோம்.
பாட்டி: உங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆமாம் நீங்கள் Be verbs பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?
இசை: ஆமாம் பாட்டி, am, is, are தானே ?
பாட்டி: very good ம்மா .
இன்னும் விரிவாகச் சொல்வதென்றால், சில verb வார்த்தைகளுக்கு செயல் (action) என்று எதுவும் கிடையாது. அவை subject -ன் கடந்த / நிகழ் / எதிர்கால நிலையைக் குறிக்க மட்டுமே பயன்படும். இதற்கு நேரடியாக ஒரு அர்த்தம் இருக்கிறது. "இரு" என்பதே அது.
இதற்கும் present tense, past tense, future tense எல்லாம் இருக்கிறது.
am, is ஆகிய word-ற்கு was என்கிற word, past tense ஆக வரும்.
are என்கிற word-ற்கு were என்கிற word, past tense ஆக வரும்.
I , we க்கு, shall be என்கிற வார்த்தைகள் be verbs ஆக வரும்.
மற்ற எல்லா (you, he , she , it, they ) subject ற்கும் shall be என்கிற வார்த்தைகள் be verbs ஆக வரும்.
இசை: பாட்டி நீங்க சொன்னதை வெச்சு இந்த table எழுதியிருக்கேன். சரியானு கொஞ்சம் பாருங்க.
பாட்டி: (மகிழ்வுடன்) செல்லமே! அவ்வளவுதான் Be verbs.
Fill in the blanks
I am happy - நான் மகிழ்வாக இருக்கிறேன்
I was happy - நான் மகிழ்வாக இருந்தேன்
I shall be happy - நான் மகிழ்வாக இருப்பேன்
We are happy -
We were happy -
We shall be happy -
You are happy -
You were happy -
You will be happy -
He/She/It is happy -
He/she/It was happy -
He/She/It will be happy -
They are happy -
They were happy -
They will be happy -
Word Bank
நேற்று – yesterday
இன்று - today
நாளை – tomorrow
காலை - morning
மாலை - evening
மதியம் - noon
இரவு - night
(தொடரும்)
கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்