கொஞ்சம் Technique கொஞ்சம் English - 5: இன்னைக்கு topic வந்து verbஆ?

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 5: இன்னைக்கு topic வந்து verbஆ?
Updated on
2 min read

இனியன்: பாட்டி! இன்னைக்கு எங்க class-ல, sentence உருவாக்கி விளையாடிட்டு இருந்தேன் தெரியுமா? என்னோட notebook-ஐ பாருங்களேன்.

இசை: வீட்டுக்கு வந்ததும் uniform மட்டும் மாத்தினால் போதுமா ? கை கால், முகம் கழுவ வேண்டாமா?

(இசையின் குரலைக் கேட்டதும், ஓடிச் சென்று விரைவாக எல்லாவற்றையும் முடித்து திரும்பி வந்தான் இனியன்).

மூன்று பேரும் அமர்ந்தனர்.

பாட்டி: இனியா, உன்னுடைய note-ஐ பார்க்குறதுக்கு முன்னால தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்னு இருக்கு.

இந்த sentence எல்லாவற்றையும் இன்னமும் கூட group செய்ய முடியும். அதுக்கு verb என்கிற வினைச்சொல் தேவைப்படும்.

இனியன்: அப்போ இன்னைக்கு topic வந்து verbஆ? (கேள்வியைத் தொடங்கினான் இனியன்).

பாட்டி: மிகவும் சரி.

ஒரு sentence க்கு verb மிகவும் முக்கியம். நம்ம செய்யுற ஒவ்வொரு செயலும் (actions) verb என்ற category க்கு கீழே வரும்.

இசை: நிற்கிறது, நடக்கிறது, ஓடுறது, ஆடுறது, பாடுறது, குதிக்கிறது, தூங்குறது , எழும்புறது (இப்படி verbs-ஐ அடுக்க ஆரம்பித்தாள் இசை)

இனியன்: பல்லு தேய்க்கிறது, பால் குடிக்கிறது, தோசை சாப்பிடுறது... (என்றான் இனியன்)

பாட்டி: very nice. இங்கே பல், பால், தோசை எல்லாம் object ன்னு சொல்லுவோம். மற்றவை எல்லாமே verbதான்.

இங்கே, “குடிக்கிறேன், குடித்தேன், குடிப்பேன்” என்கிற மூன்று verbs வார்த்தைகளை உதாரணத்திற்கு எடுத்துக்குவோம்.

குடிக்கிறேன் என்பது நடந்து கொண்டிருக்கிற ஒரு செயலைக் காட்டுகிறது. இது நிகழ் காலம். ஆங்கிலத்தில் present tense.

குடித்தேன் என்பது நடந்து முடிந்த ஒரு செயலைக் காட்டுகிறது. இது இறந்த காலம். ஆங்கிலத்தில் past tense.

குடிப்பேன் என்பது நடக்க போகிற ஒரு செயலைக் காட்டுகிறது. இது எதிர் காலம். ஆங்கிலத்தில் future tense.

இதில் குடிக்கிறேன் (drink) என்பது present tense.

குடித்தேன் (drank) என்பது past tense.

குடிப்பேன் (will drink) என்பது future tense.

இதைப் பற்றி இன்னும் விரிவாக, எளிதாக படிக்க ஒரு வழி இருக்குது. நான் சொல்லுறதை கேட்பீங்களா ?

சொல்லுங்க பாட்டி.

இந்த புத்தகத்தில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் 50 verbs இருக்குது. மனப்பாடம் மட்டும் பண்ணிட்டு வாங்க. ஏன் என்று பிறகு சொல்கிறேன்.

சரி பாட்டி என்று ஒரு சேர கூறினர் இசையும், இனியனும்.

என்ன நீங்களும் படிச்சுட்டு வருவீர்கள் தானே!

மீண்டும் சந்திப்போம்

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in