

இசையும் இனியனும், பள்ளி முடிந்து energeticஆக வீடு திரும்பினர். பாட்டியைப் பார்த்ததும் இருவருக்கும் முகத்தில் மகிழ்ச்சி.
வாங்க. வாங்க. இன்றைய நாள் எவ்வாறு இருந்தது?
ஜாலி ஆ இருந்தோம் பாட்டி என்று சொல்லிக் கொண்டே இருவரும் வேகமாக கை, கால், முகம் எல்லாவற்றையும் கழுவி விட்டு பாட்டியிடம் வந்து அமர்ந்தனர்.
பாட்டி கட்டிலில் அமர்ந்து செய்தித்தாளில் (newspaper) வரும் குறுக்கெழுத்து போட்டியை (crosswords puzzle) நிரப்பிக் கொண்டு இருந்தார்.
பாட்டி: நேற்று பார்த்த subject உங்களுக்கு ஞாபகம் இருக்குது தானே ?
இசை: ஆமாம் பாட்டி , subject group ன்னு ஒரு விளையாட்டை நாங்க கண்டுபிடிச்சு விளையாட ஆரம்பிச்சிட்டோம்ன்னா பார்த்துக்கோங்களேன்.
பாட்டி: மகிழ்ச்சி டா செல்லம்.
பாட்டி: இனியா, I என்கிற subject வச்சு ஒரு sentence சொல்லு, பார்க்கலாம்.
இனியன் : I like milk
இசை: I like tea
பாட்டி: I like coffee
என்று மூவரும் சிரித்தனர்
இங்கே I என்கிற subject ஐ பற்றி பேசக் கூடிய பகுதியை predicate ன்னு சொல்லுவாங்க.
இனியன்: "like milk" தான் predicate ஆ பாட்டி.
இசை: அப்படின்னா subject ம் predicate ம் சேர்ந்து தான் வரும்ன்னு சொல்லுறீங்க. அப்படி தானே ?
பாட்டி: correct
இசை: ஹுர்ரே(Hurray ) ... பாட்டி நான் technique கண்டு பிடிச்சிட்டேன் (மகிழ்ச்சியில் கத்தினாள் இசை.)
subject predicate = sentence
பாட்டி: (மகிழ்வுடன்) செல்லமே!!! அவ்வளவு தான் sentence . நாளை இதன் தொடர்ச்சியை பார்க்கலாம்
Friends, நீங்களும் கீழே உள்ள sentence-ல் predicate எது என்று அடிக்கோடு போட்டு காட்டவும்.
I like Juice.
We live in India.
You eat rice,
He plays cricket.
She cooks rasam .
The dog barks at night
They drink water.
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்