

இசையும் இனியனும், வகுப்பில் நடந்த சம்பவங்களை (incidents) ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு வீட்டினுள் வந்தனர். பாட்டியைப் பார்த்ததும் இருவருக்கும் முகம் மலர்ந்தது.
இனியன் & இசை: We, You, They எல்லாம் plural. இதையே, இன்னும் மூன்று group ஆ பிரிக்க முடியும்னு நேத்து சொன்னீங்களே பாட்டி. அதென்ன இப்போ சொல்லுங்களேன்
பாட்டி: வாங்க...வாங்க...பேசுவோம் இப்போ உங்ககிட்ட பேசிட்டு இருக்கிற என்னை 1st person ன்னு சொல்லலாம். என்னுடன் நேரடியா conversation வைக்கிற உங்களை 2nd person ன்னு சொல்லலாம். இந்த conversationல கலந்து கொள்ளாத மற்றவர்களை 3rd person ன்னு சொல்ல முடியும்.
இசை: பாட்டி...நான் technique புடிச்சிட்டேன் !! (உற்சாகத்தில் கத்தினாள் இசை) இந்த table பாருங்க...நீங்க சொல்லச் சொல்ல நான் எழுதியிருக்கிறேன்.
பாட்டி: (மகிழ்வுடன்) செல்லமே !! அவ்வளவு தான் subject . நாளை இதன் தொடர்ச்சியை பார்க்கலாம்
Word Bank
பயிற்சி - practice
முயற்சி - effort
நுணுக்கம் – technique
வார்த்தைகள் - words
எளிமைப்படுத்து – Simplify
குழு - Group
வாக்கியம் – Sentence
ஒருமை - Singular
பன்மை - Plural
உரையாடல் - Conversation
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்