கொஞ்சம் Technique கொஞ்சம் English - 2: இது வேற Subject!

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 2: இது வேற Subject!
Updated on
1 min read

பாட்டியும், இசையும் பள்ளியில் கொடுத்த புத்தகங்களுக்கு அட்டை போட்டுக் கொண்டு இருந்தனர். இனியனும் அங்கே உட்கார்ந்து சிறு சிறு உதவிகள் இருவருக்கும் செய்து கொண்டிருந்தான்.

பாட்டி: உங்க இரண்டு பேருக்கும் ஒரு சின்ன கேள்வி. subject ன்னா என்ன, யாராவது சொல்லுங்க பாப்போம்?

இனியன்: maths, science , social science ...தானே பாட்டி?

பாட்டி: நீ சொல்வது சரிதான். இதேபோல English லையும் subject என்று ஓன்று இருக்கிறது தெரியுமா ?

இனியன்: English - ஏ ஒரு subjectதான். அதுக்குள்ள இன்னொரு subject-ஆ ?

பாட்டி: நம்ம பேசக் கூடிய பெரும்பாலான வாக்கியத்தில் subject கண்டிப்பாக இருக்கும்.

இசை: எனக்கு தெரியும். I, We, You, He, She, It, They இதெல்லாம் தானே subject.

பாட்டி: very good இசை. இந்த subject ஐ singular, plural ன்னு இரண்டு group-ஆ பிரிக்கலாம் தெரியுமா ?

இசை: எனக்கு தெரியும். singular ன்னா ஒருத்தர், plural ன்னா ஒன்றுக்கு மேற்பட்டவர்கள். அப்படிதானே

பாட்டி: very good . அப்போ subject-ல் singular எது , plural எது ன்னு யாரவது சொல்ல முடியுமா?

இசை: I, You, He, She , It எல்லாம் singular பாட்டி

இனியன்: அப்போ, We, They எல்லாம் plural ஆ பாட்டி?

பாட்டி: ஆமாம். அதோட You என்பது singular லையும் வரும். plural லையும் வரும். நீ என்கிற சொல்லுக்கும், நீங்கள் என்கிற சொல்லுக்கும் You என்கிற ஒரே வார்த்தைதான் ஆங்கிலத்தில் இருக்கிறது.

இனியன்: அப்போ, We, You, They எல்லாம் plural.

பாட்டி: மிகவும் சரி இனியா... இதையே, இன்னும் மூன்று group-ஆ இதையும் பிரிக்க முடியும் தெரியுமா?

இனியம்: ஓ அப்படியா?

பாட்டி: ஆமா இனியன்...அதை நாளைக்கு பேசுவோம்

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in