

“பாட்டி, செம காமெடி இன்னைக்கு. English வகுப்பில், இனி English-ல் தான் பேசணும் ன்னு டீச்சர் சொல்லிட்டாங்க. Class முடியுற வரைக்கும் நாங்க யாரும் வாயை திறக்கவே இல்லையே” என்றாள் இசை.
இசையின் பாட்டி அமுதா. இசையின் நெருங்கிய நண்பரும் கூட.
பாட்டி: ஏன்? teacher வேற எதுவும் எழுத கொடுத்தாங்களா என்ன?
இசை: போங்க பாட்டி, நம்ம பேசுறது தப்புன்னு யாராவது சொல்லிட்டா சிரிச்சிடுவாங்கல்ல. அதனால்ல நாங்க எல்லாருமே அமைதியா இருந்துட்டோம்.
பாட்டி: ஆமாம், ஆமாம். நாங்களும் அப்படிதான் பள்ளியில் படிக்கிறப்ப இருந்தோம்.
இசை : அப்படியா பாட்டி! ஆனால், நீங்கதான் ரொம்ப அருமையா English பேசுறீங்களே உங்களையும் பார்த்து சிரிச்சாங்களா?
பாட்டி: ஆமாம், ing(இங்) மொழி எங்களுக்கும் தெரியும் என்றதும் இருவரும் சத்தமாக சிரித்தனர்.
இசை: பாட்டி, நானும் தயக்கமில்லாமல், உங்களை மாதிரி பேச முடியுமா ? யாராவது தஸ் புஸ்ன்னு ஆங்கிலத்தில் பேசுறத பார்த்தா கொஞ்சம் மலைப்பா இருக்குது.
பாட்டி: கண்டிப்பாம்மா. மிகவும் எளிது. நீ மட்டும் இல்லை. எல்லோராலும் ஆங்கிலம் பேச முடியும். பயிற்சியும் (practice), முயற்சியும் (effort) இருந்தால் போதும்.
இசை: எப்படி பாட்டி சொல்றீங்க?
பாட்டி: எந்த ஒரு காரியத்துக்கும் நுணுக்கம் (technique) ஓன்னு இருக்கும். அதை சரியாக கண்டுபிடிச்சுட்டா போதும். பிறகு எல்லாமே எளிது.
இசை: ’technique’ ஆ? அப்படீனா?
பாட்டி: கடினமா நமக்கு தெரியுற ஆங்கிலத்தை, புரிகிற மாதிரி நாமே எளிமைப்படுத்தி படிக்கிறதுன்னு வெச்சுக்கலாம்.
இசை: பாட்டி ... அப்போ எனக்கும் அந்த technique எல்லாம் கத்துத்தரீங்களா?
“எனக்கும்..எனக்கும்” என்று ஒரு சிறு குரல் பக்கத்துக்கு அறையிலிருந்து கேட்டது. அங்கு இசையின் குட்டித் தம்பி, நான்காவது படிக்கும் இனியன் நின்று கொண்டிருந்தான்.
இனியன்: ஆமாம். நான் கூட நிறைய வார்த்தைகளை (words) பள்ளிக்கு போக ஆரம்பிச்ச பிறகுதான் கத்துக்கிட்டேன் .
இசை: words நிறைய தெரிஞ்சா, நிறைய பேச முடியும். சரிதானே பாட்டி.
பாட்டி: ஆமாம்! அதனால் இன்னைல இருந்து தினமும் குறைந்தது 5 words நாம கற்றுக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.
இசை & இனியன்: சரி பாட்டி. இன்றிலிருந்தே ஆரம்பிப்போம்.
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்