

பிரபல அமெரிக்க சிறுகதை எழுத்தாளர் வில்லியம் சிட்னி பாட்டரின் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்று, ‘மேஜியின் பரிசு’. ஓ.ஹென்ரி என்ற புனைபெயரில் அவர் எழுதி வந்தார். 1905-ல் வெளிவந்த இந்த சிறுகதை இன்றுவரை கணவன் மனைவியின் பரஸ்பர அன்புக்கு உதாரணமாக உலகெங்கிலும் மேற்கோள் காட்டப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட அச்சிறுகதையை இப்போது தமிழில் மொழிபெயர்த்து வாசிக்கலாம் வாங்க...
The Gift of the Magi
O.Henry
That was all. She had put it aside, one cent and then another and then another, in her careful buying of meat and other food. Della counted it three times. One dollar and eighty-seven cents. And the next day would be Christmas.
There was nothing to do but fall on the bed and cry. So Della did it.
While the lady of the home is slowly growing quieter, we can look at the home.Furnished room at a cost of $8 a week. There is little more to say about it.
In the hall below was a letter-box too small to hold a letter. There was an electric bell, but it could not make a sound. Also there was a name beside the door: “Mr. James Dillingham Young.”
When the name was placed there, Mr. James Dillingham Young was beingpaid $30 a week. Now, when he was paid only $20 a week, the name seemed too long and important. It should perhaps have been “Mr. James D. Young.” But when Mr. James Dillingham Young entered the furnished rooms, his name became very short indeed Mrs. James Dillingham Young put her warmly about him and called “Jim.” You have already met her. She is Della.
Della finished her crying and cleaned the marks of it from her face. She stoodby the window and looked out with no interest. Tomorrow would be Christmas Day, and she had only $1.87 with which to buy Jim a gift. She had put aside as much as she could for months, with this result. Twenty dollars a week is not much. Everything had cost more than she expected. It always happened like that.
மேஜியின் பரிசு
ஓ.ஹென்ரி
ஒரு டாலர் மற்றும் எண்பத்தேழு சென்ட்டுகள். மொத்தமுமே அவ்வளவுதான். இதைத்தான் அவள் தனியாக எடுத்து வைத்திருந்தாள். மிகுந்த கவனத்துடன் இறைச்சி மற்றும் இதர உணவு பண்டங்களை வாங்கினாள்.
ஒவ்வொரு சென்ட்டாக, ஒவ்வொரு சென்ட்டாக என்று டெல்லா அவற்றை மூன்று முறை எண்ணிக் கணக்குப் பார்த்தாள். ஒரு டாலர் மற்றும் எண்பத்தேழு சென்ட்டுகள். மறுநாள் கிறிஸ்துமஸ் தினம்.
படுக்கையில் சரிந்து அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை. ஆகவே டெல்லா அதைச் செய்தாள்.
அந்த வீட்டின் தலைவி கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் அடைந்து வருகையில், நாம் வீட்டைச் சுற்றிப் பார்க்கலாம். வாரம் எட்டு டாலருக்கு அலங்கரிக்கப்பட்ட மேஜை நாற்காலிகள் அறைகள். இதைப் பற்றி இன்னும் எதுவும் சொல்வதற்கில்லை.
கீழ்த்தளத்தில் உள்ள கூடத்தில் தபால் கூட கொள்ளாத அளவுக்கு ஒரு சிறிய தபால்-பெட்டி. ஒரு மின்சார அழைப்பு மணி இருந்தது, ஆனால் அதனால் ஒலி, எதுவும் எழுப்ப இயலாது. மேலும் கதவின் அருகே பெயர்ப்பலகை ஒன்றிருந்தது. "திரு. ஜேம்ஸ் டில்லிங்ஹோம் யங் ".
அந்தப் பெயர் அவ்விடத்தில் வைக்கப்பட்டபோது ஜேம்ஸ் டில்லிங்ஹோம் யங்கிற்கு ஒரு வாரத்துக்கு 30 டாலர் சம்பளம் கொடுக்கப்பட்டது. தற்போது அவருக்கு ஒருவாரத்துக்கு 20 டாலர் மட்டுமே கொடுக்கப்படும்போது, அந்தப் பெயர் மிகவும் நீளமானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தோன்றியது.
இன்னும் கேட்டால் அது ’திரு. ஜேம்ஸ் டி. யங்’ என்று இருந்திருக்க வேண்டும். ஆனால், திரு. ஜேம்ஸ் டில்லிங்ஹோம் யங் அந்த அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தபோது, அவனுடைய பெயர் மிகவும் சுருங்கியது, திருமதி.ஜே டி யங் என தன் கைகளால் அவள் தோழிகளைச் சுற்றி வளைத்து "ஜிம்" என்று அவளை அழைத்தபோது, நீங்கள் அவளை ஏற்கெனவே சந்தித்துள்ளீர்கள். அவள்தான் டெல்லா .
டெல்லா அழுது தீர்த்துவிட்டு, தன் முகத்திலிருந்து அழுத கரைகளை சுத்தம் செய்தாள். அவள் ஜன்னல் அருகில் சென்று, உற்சாகம் இழந்து வெளியே வேடிக்கை பார்த்தாள். மறுநாள் கிறிஸ்துமஸ். ஆனால், அவளிடம் ஜிம்முக்காகப் பரிசு வாங்குவதற்கு ஒரு டாலரும் 87 சென்ட்டுகளுமே இருந்தது.
மாதக்கணக்கில் தன்னால் முடிந்தவரை தனியாகச் சேமித்து வைத்திருந்தும் இதுதான் பலன். வாரத்துக்கு 20 டாலர் என்பதொன்றும் பெரிய தொகை இல்லை. ஆனால், எல்லாமே அவள் எதிர்பார்த்ததைவிட அதிக விலையாகவே இருந்தது. எப்போதும் இதே மாதிரிதான் நடந்தது.
- கட்டுரையாளர்: ஆங்கிலத் துறை முன்னாள் உதவிப் பேராசிரியர்