Last Updated : 23 Mar, 2022 04:53 PM

 

Published : 23 Mar 2022 04:53 PM
Last Updated : 23 Mar 2022 04:53 PM

ஆங்கிலம் அறிவோம் | I am in Madurai next week அல்லது I will be in Madurai next week - இந்த இரண்டு வாக்கியங்களில் எது சரி?

I am in Madurai next week அல்லது I will be in Madurai next week - இந்த இரண்டு வாக்கியங்களில் எது சரி?

நான் அடுத்தவாரம் மதுரையில் இருப்பேன் என்பதை ஆங்கிலத்தில் எப்படி சொல்லலாம். மேலே குறிப்பிட்டுள்ள இந்த இரண்டு வாக்கியங்களில் எது சரி என்பதில் பலருக்கும் குழப்பம் ஏற்படும்.

அடுத்தவாரம் என்பது எதிர்காலத்தைக் குறிக்கும் சொல். அப்படியென்றால் Future tense அதாவது எதிர்காலத்தைக் குறிக்கும் சொற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பது சரி. அந்த வகையில் I will be in Madurai next week என்பது சரியான வாக்கியமே.

அப்படியென்றால் I am in Madurai next week என்ற வாக்கியத்தில் நிகழ்காலத்தைக் குறிக்கும் am என்ற சொல் பயன்படுத்திருப்பதால் அது தவறானது என்று சிலர் நினைக்கக் கூடும். ஆனால், ஆங்கில பயன்பாட்டில் I am in Madurai next week என்பதும் சரியான பயன்பாடே. ஏற்கெனவே திட்டமிடப்பட்டுவிட்ட செயல்பாடுகளை நிகழ்காலத்தில் குறிப்பிடும் நடைமுறை ஆங்கிலத்தில் உண்டு.

அந்த வகையில் அடுத்தவாரம் மதுரைக்குச் செல்வது என்பது திட்டமிடப்பட்ட ஒன்று. அதற்கான பயணச் சீட்டும் எடுத்தாகிவிட்டது என்ற நிலையில், நான் அடுத்தவாரம் மதுரையில் இருக்கிறேன் என்று குறிக்கும் வகையில் I am in Madurai next week என்று சொல்வதும் சரியான அனுமதிக்கப்பட்ட பயன்பாடே. எனவே, மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு வாக்கியங்களுமே சரியான வாக்கியங்களே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x