Published : 28 Feb 2020 10:18 AM
Last Updated : 28 Feb 2020 10:18 AM

வெற்றி மொழி: சிகரம் தொட்ட முதல் இந்திய சிறுமி!

Climbing the Everest was certainly more difficult than I thought, but my willpower to prove that a tribal girl can do something kept me going

– Malavath Purna

“நான் நினைத்ததை விடவும் இமயமலையில் ஏறுவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், ஒரு பழங்குடியினச் சிறுமியால் சாதிக்க முடியும் என்று நிரூபிக்க வேண்டும் என்கிற மனஉறுதிதான் என்னை சிகரத்தை நோக்கி அழைத்துச் சென்றது”

- மலாவத் பூர்ணா.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள தட்வி என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சிறுமி மலாவத் பூர்ணா. 2014-ம் ஆண்டில் தன்னுடைய 13 வயதில் இமயமலை உச்சியில் கால்பதித்தார்.

இதன் மூலம் இளம் வயதில் இமயமலை சிகரத்தைத் தொட்ட முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார். முதல் இந்தியர் மட்டுமல்ல இமயமலை சிகரத்தைத் தொட்ட முதல் இந்திய இளம்பெண் இவரே.

அவருடைய வாழ்க்கை கதையை தழுவி, ’பூர்ணா: Courage Has No Limit’ என்ற இந்தித் திரைப்படம் 2017-ல் எடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x