Published : 26 Feb 2020 10:32 am

Updated : 26 Feb 2020 10:32 am

 

Published : 26 Feb 2020 10:32 AM
Last Updated : 26 Feb 2020 10:32 AM

மொழிபெயர்ப்பு - பூனைக்கும் இசை மருந்தாகும்: புதிய ஆய்வு

playing-cat-specific-music-may-reduce-feline-s-stress-during-vet-visits

வாஷிங்டன்

Playing "cat-specific music" may reduce feline's stress during vet visits

Washington,

Playing special music tailored for cats may help reduce the feline's stress levels during a visit to the veterinary clinic, according to a study.
The study, published in the Journal of Feline Medicine and Surgery. According to the researchers, including those from Louisiana State University in the US, cats under general anaesthesia remain physiologically responsive to music. They said the felines appear to be in a more relaxed state when played classical music, compared with pop and heavy metal.

The study noted that musical pieces that are considered pleasing to the human ear often have a beat similar to the human resting pulse rate -- which is generally between 60 and 100 beats per minute.

Extending this principle to cat-specific music, the scientists composed lines based on cat-associated vocalis ations like purring and suckling sounds,
as well as frequencies similar to the feline vocal range.

To assess this hypothesis, they enrolled 20 pet cats and played 20 minutes of the cat-specific music Scooter Bere's Aria by David Teie, classical music (Elegie by Faure), or silence in a random order at each of three physical examinations at the veterinary clinic, two weeks apart, according to the study.
Based on video recordings of the cats' body postures and reactions to the handler during physical examinations. According to the study, the cats appeared to be less stressed during the examination

- PTI

பூனைக்கும் இசை மருந்தாகும்: புதிய ஆய்வு

கால்நடை மருத்துவமனையில் பூனைகளுக்கு வைத்தியம் செய்யும் போது குறிப்பிட்ட வகை இசையை இசைப்பதன் வழியாக பூனைகளை ஆற்றுப்படுத்த முடியும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவ சோதனையின் போது பூனைகள் பதற்றமடைவதைத் தவிர்க்க இசை கைகொடுக்குமாம். அமெரிக்காவின் லூசியானா மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு இது.

இந்த ஆய்வுத் தொடர்பான தகவல் பூனைகளுக்கான மருந்து மற்றும் அறுவை சிகிச்சை என்ற தலைப்பிலான ‘ஃபெலைன் மெடிசின் அண்டு சர்ஜரி’ ஆய்விதழில் பிரசுரமாகி இருக்கிறது. மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையிலும் பூனைகள் இசைக்கு எதிர்வினையாற்றுவது தெரியவந்துள்ளது.

அதிலும் மேற்கத்திய இசை பாணிகளான பாப் மற்றும் ஹெவி மெட்டல் ஆகியவற்றை விடவும் செவ்வியல் இசைக்கு பூனைகள் அமைதி அடைவது கண்கூடாக தெரியவந்துள்ளது. மனிதர்களின் நாடித் துடிப்புக்கும் அவர்கள் காதில் கேட்கும் இசைக்கும் ஒத்திசைவு இருப்பதை இந்த ஆய்வு உறுதி செய்துள்ளது.

மனிதர்களின் நாடித் துடிப்பு சராசரியாக நிமிடத்துக்கு 60-ல் இருந்து 100-ஆக இருக்கிறது. இதே கோட்பாட்டின் அடிப்படையில் பூனைகளுக்குக் குறிப்பிட்ட வகை இசை அவற்றின் காதில் ஒலிக்க செய்யப்பட்டது. குறிப்பாக பூனைகள் எழுப்பும் ஓசைகள், அவை பால் குடிக்கும் சத்தம் ஆகியவற்றை பூனைகளின் ஒலி அதிர்வெண் வரம்புக்குள் ஒலிக்க செய்தனர்.

இந்த சோதனை முயற்சி கால்நடை மருத்துவமனை ஒன்றில் மேற்கொள்ளப்பட்டது. அங்கு செல்ல பிராணியாக வளர்க்கப்படும் 20 பூனைகளுக்கு 20 நிமிடங்கள்வரை பூனைக்கான இசை ஒலிக்க செய்யப்பட்டது.

அப்போது பூனைகளின் உடல் அசைவு, பரிசோதனைக்கு அவை வெளிப்படுத்திய எதிர்வினை ஆகியவை பதிவு செய்யப்பட்டன. இந்த ஆராய்ச்சியின் முடிவில் பூனைக்கும் இசை மருந்தாகும் என்பது நிரூபணமானது.

- பிடிஐ

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

மொழிபெயர்ப்புபூனைஇசைமருந்துபுதிய ஆய்வுஇசை பாணிகள்பூனைகளுக்கு வைத்தியம்பூனைகள்அறுவை சிகிச்சைசெல்ல பிராணி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author