ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? காபியை விடவும் தேநீர் பிடிக்கும்!

ஆங்கில உரையாடல் - அதிலென்ன தவறுகள்? காபியை விடவும் தேநீர் பிடிக்கும்!
Updated on
1 min read

ஜி.எஸ்.எஸ்.

நர்மதாவும், மோகனும் அடுத்தடுத்த வீட்டில் வசிப்பவர்கள். அவ்வப்போது சந்தித்துக் கொள்பவர்கள். ஒரு நாள் மோகன் நர்மதாவின் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர்களுக்கு இடையே நடைபெற்ற உரையாடலின் ஒரு பகுதி இது.

Narmada – I am going to take coffee. Will you have coffee?

Mohan - Sure.

Narmada – Then I will poor coffee in this cup for you.

Mohan - Thanks.

Narmada – Do you like tea?

Mohan - No.

Narmada – I like tea more when compared to coffee.

Mohan - My father likes tea two.

மேலே உள்ள உரையாடலைப் படித்தபோது உங்களுக்கு அதில் ஏதாவது தவறாகத் தெரிந்ததா? அந்த உரையாடலை எப்படி மேம்படுத்த முடியும் என்பதையும் யோசி​யுங்கள்.

மேற்படி உரையாடலில் உள்ள தவறுகளைப் பார்ப்போம். பேச்சின்போது சில தவறுகள் தென்படாது. என்றாலும் எழுத்து வடிவில் அவை தவறுகள் ஆகலாம். அவற்றையும் இந்தப் பகுதியில் பார்ப்போம்.

நர்மதா I am going to take coffee என்கிறாள். அதற்குப் பதிலாக அவள் I amgoing to have coffee என்று கூறி இருக்கலாம். சொல்லப்போனால் இந்த உரையாடலில் coffee என்ற சொல் வருவதற்கு முன்னால் some என்ற சொல்லைச் சேர்த்தால் அது சரியானதாக இருக்கும். Will you have some coffee? என்பதுபோல.

​Poor என்றால் ஏழ்மையான அல்லது ஏழை என்பதைக் குறிக்கும். ஒரு கோப்பையில் காபியை ஊற்றுவது என்ற அர்த்தத்தில் பேசும்போது pour என்று குறிப்பிட வேண்டும். I will pour some coffee in this cup என்பதே சரியானது.

More என்பதே ஒப்பீட்டைக் குறிக்கும் ஒரு சொல்தான். எனவே அதே வாக்கியத்தில் whencompared to என்று குறிக்க வேண்டியது இல்லை. I like tea more when compared tocoffee என்பதற்குப் பதிலாக , I like tea more than coffee என்றோ, I like tea when compared with coffee என்றோ கூறலாம்.

Two என்பது இரண்டு என்பதைக் குறிக்கிறது. எனவே My father likes tea too என்று மோகன் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in