அறிந்ததும் அறியாததும்: சிற்றுண்டி சாப்பிடலாம் வாங்க!

அறிந்ததும் அறியாததும்: சிற்றுண்டி சாப்பிடலாம் வாங்க!
Updated on
1 min read

சொற்றொடரில் எங்கெல்லாம் a, an, the ஆகிய articles-ஐ எழுதக்கூடாது என்பது பற்றி சில தினங்களுக்கு முன்னால் பேசத் தொடங்கினோம். அதில் முதல் கட்டமாக proper nouns and nouns with general sense ஆகியவற்று முன்பாக எழுதக்கூடாது என்று பேசினோம். மேலும் வேறெங்கெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை பற்றி இன்று பார்ப்போமா?

1. dinner, lunch, breakfast ஆகிய சாப்பாடு வேளைகளைக் குறிக்கும் சொற்களுக்கு முன்னால் articles-ஐ எழுதக்கூடாது.
உதாரணத்துக்கு, I invited all my friends for breakfast.

2. நோய்களை குறிப்பிடும் போது அதற்கு முன்னால் articles-ஐ எழுதக்
கூடாது.
உதாரணத்துக்கு, Tuberculosis is no longer a killer disease.

3. நாள், மாதம், பருவம் ஆகிய
வற்றை எழுதும்போது முன்னால் articles-ஐ எழுதக்கூடாது. உதாரணத்துக்கு, Sunday is a holiday. Our school remains closed for summer vacation in May.

4. மொழிகளையும், படிப்பு அல்லது பாடப்பிரிவுகளையும் குறிக்கும் சொற்களுக்கு முன்னால் articles-ஐ எழுதக்கூடாது.
உதாரணத்துக்கு, I had fun learning English Mathematics is my favourite subject. எங்கெல்லாம் articles எழுத கூடாது என்பது இப்போது புரிந்ததா!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in