Published : 09 Jan 2020 12:32 PM
Last Updated : 09 Jan 2020 12:32 PM

காற்று மாசுபாடு குழந்தைகளுக்கு மனச்சிதைவு நோயை ஏற்படுத்தும்

Air pollution may make kids more prone to schizophrenia: Study

London

Kids who grow up in areas with heavy air pollution have a higher risk of developing schizophrenia, according to a study which suggests that particulate matter in air may not only harm physical well-being, but also mental health.

The study, published in the Journal of the American Medical Association (JAMA), assessed genetic data from iPSYCH -- a project to find the basis and treatment of the most common and serious mental illnesses, including autism, bipolar disorder, and depression.

According to the study, children who are exposed to a high level of air pollution while growing up, have an increased risk of developing schizophrenia -- a chronic and severe mental disorder which affects how a person thinks, feels, and behaves.

"Children who are exposed to an average daily level above 25 g/m3 have an approximately 60 per cent greater risk of developing schizophrenia" explained study co-author Henriette Thisted Horsdal from Aarhus University.

To put the findings in perspective, the researchers said the lifetime risk of developing schizophrenia is approximately two per cent for people, but for those exposed to the highest level of air pollution, this risk is three per cent. Further studies are needed to identify the cause of this association, the scientists said.

- PTI

காற்று மாசுபாடு குழந்தைகளுக்கு மனச்சிதைவு நோயை ஏற்படுத்தும்

லண்டன்

காற்று மாசுபாட்டினால் உடல்நலம் மட்டுமல்ல மனநலமும் பாதிக்கக்கூடும் என்று புதிய ஆய்வு முடிவு வெளிவந்துள்ளது. அதிலும் காற்று அதிகமாக மாசடைந்த சுற்றுச்சூழலில் வளரும் குழந்தைகளுக்கு ஸ்கிட்ஸஃப்ரீனியா எனப்படும் மனச்சிதைவு நோய் ஏற்படக் கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.

அமெரிக்கா மருத்துவ சங்க ஆய்விதழில் இந்த ஆய்வு கட்டுரை வெளியாகி உள்ளது. ஆட்டிசம் குறைபாடு, இருதுருவ மனநோய், மனச்சோர்வு உள்ளிட்ட தீவிர மனநோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் ’ஐசைக்’ திட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு இந்த ஆய்வுத் தாள் எழுதப்பட்டு இருக்கிறது.

ஒருவர் சிந்திக்கும், உணரும், நடந்துகொள்ளும் விதத்தின் மீது தீவிரமான தாக்கம் செலுத்தக்கூடியது மனச்சிதைவு என்கிற மனநோயாகும். இந்நிலையில், அதிகப்படியான காற்று மாசுபாடு உள்ள பகுதியில் வாழும் குழந்தைகள் இத்தனை தீவிரம் வாய்ந்த மனநோய்க்கு ஆளாக வாய்ப்பு இருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த ஆய்வுக் குழு உறுப்பினரான ஹென்ரெட் திஸ்டட் ஹார்ஸ்டால் கூறுகையில், “தினசரி மூன்று கியூபிக் மீட்டர் பரப்பளவுக்கு 25 கிராமுக்கு அதிகமான தூசியால் தாக்கப்படும் குழந்தைகளுக்கு மனச்சிதைவு நோய் ஏற்பட 60 சதவீதம் சாத்தியம் உள்ளது. ” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சாதாரணச் சூழலில் வாழும் மனிதர்களுக்கு மனச்சிதைவு ஏற்பட 2 சதவீதம்வரை சாத்தியம் உள்ளது என்றால் அதிகப்படியான காற்று மாசுபாடு உள்ள இடத்தில் வாழ்பவர்களுக்கு மனச்சிதைவு தாக்க 3 சதவீதம்வரை சாத்தியம் இருக்கிறது. இதுபோக காற்று மாசுபாட்டுக்கும் மனச்சிதைவு நோய்க்கும் இடையிலான தொடர்பு குறித்து மேலும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x