Published : 05 Dec 2019 11:08 AM
Last Updated : 05 Dec 2019 11:08 AM

மொழிபெயர்ப்பு: மேற்கத்திய நாடுகளைக் கல்வியில் முந்தியது சீனா

China outclasses West in key education survey

Pari

Teenagers from four big Chinese regions outshone their contemporaries in Western nations in a keenly watched survey of education capabilities published Tuesday, which also showed no improvement trend in developed countries over the past two decades.

The PISA survey is carried out every three years by the Paris-based Organisation for Economic Cooperation and Development (OECD), this time among its 37 member states and 42 partner countries and economies.

The latest study, based on two-hour tests taken by 600,000 15-year-olds last year, showed that students in the four Chinese regions of Beijing, Shanghai, Jiangsu and Zhejiang -- as well as Singapore -- topped the rankings, ahead of their Western counterparts in reading, mathematics and science.

“In many Asian countries, the education of children is priority number one,” said Eric Charbonnier, an education analyst at the OECD.
“Teachers have high-quality training and there have been investments in schools that had difficulties,” he added.

In reading, which the OECD considers its headline indicator of education potential, the best performing OECD state was the tiny Baltic nation of Estonia, followed by Canada, Finland and Ireland.

Bigger European nations languished well behind in the rankings, with Britain in 14th place, Germany 20th and France 23rd. The United States placed 13th in reading.OECD secretary-general Angel Gurria said the students from the four Chinese provinces had “outperformed by a large margin their peers from all of the other 78 participating education systems”.

- AFP

மேற்கத்திய நாடுகளைக் கல்வியில் முந்தியது சீனா

பாரீஸ்

சீனாவின் நான்கு நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களுடைய வயது ஒத்த மேற்கத்திய நாட்டு மாணவர்களைக் காட்டிலும் சிறப்பாகப் படிப்பதாக புதிய கணக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது. வளர்ந்த நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளில் கல்வியில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பீசா கணக்கெடுப்பானது பாரீஸை சேர்ந்த பொருளாதார கூடுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஒஇசிடி) ஒன்றினால் மூன்றாண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 32 உறுப்பினர் மாநிலங்களுக்கும் 42 பங்குதாரர் நாடுகளுக்கும் இடையில் இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வாசித்தல், கணிதம் மற்றும் அறிவியல் குறித்து நடத்தப்பட்ட இரண்டு மணிநேர தேர்வின் முடிவை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2018-ல் 15 வயதை எட்டிய 6 லட்சம் மாணவர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட இந்த தேர்வில் சீனாவின் பெய்ஜிங், ஷாங்காய், ஜியாங்சு, ஜேஜியாங் ஆகிய மாகானங்களைச் சேர்ந்த மாணவர்களும் சிங்கப்பூர் மாணவர்களும் முதல் இடங்களைப் பிடித்தனர். மேற்கத்திய நாட்டு மாணவர்களை விடவும் அவர்கள் தேர்வில் முன்னிலை வகித்தனர்.

ஒஇசிடி-யை சேர்ந்த கல்வி ஆய்வாளர் எரிக் சார்பானியர் இது குறித்துக் கூறுகையில், “பல ஆசிய நாடுகளில் கல்விக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. முதல் தர பயிற்சியானது ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது. பின்தங்கிய நிலையில் இருக்கும் பள்ளிகளுக்கு தேவையான முதலீடு வழங்கப்படுகிறது” என்றார்.

கல்விக்கான முக்கிய அறிகுறியாக வாசிப்புத் திறனை ஒஇசிடி கருதுகிறது. இந்த அடிப்படையில் வட ஐரோப்பிய நாடான எஸ்டோனியா முதல் இடத்திலும் அதைத் தொடர்ந்து கனடா, பின்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளின் மாணவர்கள் வாசிப்புத் திறனில் சிறந்து விளங்குவது தெரிய வந்துள்ளது.

பெரிய ஐரோப்பிய நாடுகளோ இந்த தரவரிசை பட்டியலில் பின்னடைவு கண்டுள்ளன. பிரிட்டன் 14-வது இடத்திலும் ஜெர்மனி 20-வது இடத்திலும், பிரான்சு 23-வது இடத்திலும் உள்ளன. அமெரிக்கா வாசிப்பில் 13-வது இடத்தில் உள்ளது.

ஒஇசிடியின் பொது செயலாளர் ஏஞ்சல் குரியா சீனாவின் நான்கு மாகாணங்களை குறித்துப் பேசுகையில், “இந்த தேர்வை எழுதிய பிற 78 கல்வி அமைப்புகளுடன் ஒப்பிடும்போது மிகப் பெரிய வித்தியாசத்தில் அதிக மதிப்பெண்களைச் சீன மாணவர்கள் குவித்துள்ளனர்” என்றார்.

- ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x