Published : 26 Nov 2019 09:47 AM
Last Updated : 26 Nov 2019 09:47 AM

மொழிபெயர்ப்பு: பழைய நாளிதழை மறுசுழற்சி செய்து கார்பன் நானோ குழாய் தயாரிக்கலாம்!

'Old newspapers can be used for cheap, large scale production of carbon nanotubes'

Houston,

Nov 24 (PTI) Researchers have shown that old newspapers can be used as a material on which carbon nanotubes can be grown on a large scale, an advance that may new lead to low cost, eco-friendly methods for manufacturing the tiny molecules.

The researchers, including Indian-origin researcher Varun Shenoy Gangoli from Rice University in the US, said carbon nanotubes have incredible physical properties which allow them to be used in a wide range of commercial product parts such as conductive films for touchscreen displays, flexible electronics, and antennas for 5G networks.

The study, published in the Journal of Carbon Research, revealed that the large surface area of newspapers offered an ideal way to chemically synthesise carbon nanotubes. The researchers, however, said not all newspapers are equally good as only those in which a china clay called kaolin is used for sizing resulted in carbon nanotube growth.

"Many substances including talc, calcium carbonate, and titanium dioxide can be used in sizing in papers which act as a filler to help with their levels of absorption and wear," Gangoli said.
The researchers said previous studies had shown that graphene -- a structurally alternate arrangement of carbon atoms -- carbon nanotubes, and carbon dots can be been synthesised with a variety of materials as the base including food waste, vegetation waste, animal, bird, or insect waste. But until now, they said, this research had been limited.

"With our new research, we have found a continuous flow system that dramatically reduces the cost which could impact on the future mass manufacture of single walled carbon nanotubes," said Andrew Barron, a professor at Rice University. - PTI

பழைய நாளிதழை மறுசுழற்சி செய்து கார்பன் நானோ குழாய் தயாரிக்கலாம்!

ஹவுஸ்டன் (அமெரிக்கா):

மறுசுழற்சி முறையில் பழைய நாளிதழ் காகிதங்களைக் கொண்டு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத கார்பன் நானோ குழாய்களைப் பெருமளவில் தயாரிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அதிக பரப்பளவைக் கொண்டதாகநாளிதழ்கள் இருப்பதால் வேதியியல் சேர்க்கை முறையில் அவற்றைக்கொண்டு கார்பன் நானோ குழாய்களை தயாரிக்கலாம் என்று ‘கார்பன் ரிசர்ச்’ ஆய்விதழில் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் அனைத்து விதமான நாளிதழ்களையும் கொண்டு இதை செய்துவிட முடியாது. ’கவுலின்’ எனப்படும் சீனக் களிமண் கொண்டு தயாரிக்கப்பட்ட நாளிதழ்களின் காகிதம் மட்டுமே இதற்கு பயன்படும்.

இந்த ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருண் ஷெனாய் கங்குலியும் ஒருவர். இவர்
அமெரிக்காவில் ரைஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவர்இந்த ஆய்வு குறித்துக் கூறுகையில், “டச் ஸ்கிரீன் திரைகள், நெகிழ்வுத்தன்மை கொண்ட மின்னணுக் கருவிகள் மற்றும் 5ஜி வலைப்பின்னலுக்கான ஆண்டெனா ஆகியவற்றைத்
தயாரிக்க அடிப்படை பொருள் கார்பன்நானோ குழாய்கள். வழுவழுப்பானதாதுப்பொருள், சுண்ணாம்பு, டைட்டானியம் டை ஆக்சைடு உள்ளிட்டபலவிதமான பொருட்களையும் கார்பன் நானோ குழாய் தயாரிப்பில் பயன்படுத்தலாம்” என்றார்.

கார்பன் அணுவின் அமைப்பை ஒத்ததாகவும் அதற்கு மாற்றாகவும் பயன்படக்கூடியது கிராஃபீன். இதை மீந்துபோன உணவுப் பண்டம், காய்கறிக் குப்பை, விலங்கு, பறவை மற்றும் பூச்சிகளின் கழிவோடு இணைப்பதன் மூலம் கார்பன் நானோ குழாய்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை ஏற்கெனவே சில ஆய்வுகள் உறுதிப்படுத்தி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரி
வித்துள்னர். ஆனாலும் அந்த ஆய்வுமுடிவுகளில் சில குறைகள் காணப்பட்டன.

”இந்நிலையில் புதிய ஆய்வின் மூலம் தொடர்ந்து செயல்படக்கூடிய அறிவியல் திட்டம் கிட்டியுள்ளது. இதன் மூலம் நம்பமுடியாத அளவுக்கு மிகக் குறைந்த செலவில் கார்பன் நானோ குழாய்களை மிக அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும்” என்று ரைஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ பாரன் தெரிவித்துள்ளார்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x