Published : 25 Nov 2019 08:36 AM
Last Updated : 25 Nov 2019 08:36 AM

மொழிபெயர்ப்பு: ஸ்மார்ட்போன் மோகத்தை அகற்றக் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள்

Indonesian kids given pets to wean them off smartphones

Bandung (Indonesia)

Officials in one Indonesian city have hatched a plan to wean children off smartphones -- by giving them their own fluffy chicks to raise.

Around 2,000 four-day-old chicks will be handed out to pupils at elementary and junior high schools in Bandung in the coming weeks in an attempt to distract the kids from their gadgets.

Students must feed their new pets before and after school and can keep them at home or on school premises if they don't have space in their backyard.

Authorities in the city, around 150 kilometres (95 miles) southeast of the capital Jakarta, have dubbed the unusual project “chickenisation”.

At a ribbon-cutting held Thursday, a dozen chicks in cages were distributed with a sign that read: “Please take good care of me”.

“There is an aspect of discipline here,” said Bandung's mayor Oded Muhammad Danial.
But the project isn't just about curbing schoolkids' phone habits, he said -- it is also part of a national plan to broaden pupils' education launched by President Joko Widodo.
Danial first announced the chick project last month but said the city needed time to sort out logistics with local chicken farms.- AFP

ஸ்மார்ட்போன் மோகத்தை அகற்றக் குழந்தைகளுக்கு கோழிக்குஞ்சுகள்

பாண்டுங் (இந்தோனேசியா):

கோழிக்குஞ்சுகளை வளர்க்கக் குழந்தைகளை பழக்கப்படுத்துவதன் மூலம் அவர்களிடம் காணப்படும் ஸ்மார்ட்போன் மோகத்தை அகற்றலாம் என்று இந்தோனேசிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதை முன்னிட்டு, இந்தோனேசியாவில் உள்ள பாண்டுங் நகரத்தை சேர்ந்த தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நான்கு நாட்களேயான 2,000 கோழிக்குஞ்சுகளை இந்த வாரம் வழங்கமுடிவெடுத்துள்ளது. எலெக்ட்ரானிக் கருவிகள் மீதான ஈர்ப்பை குழந்தைகளிடம் குறைக்கவே இந்த முயற்சி.

தங்களுக்கு அளிக்கப்படும் புதிய செல்ல பிராணிக்குப் பள்ளிக்கு கிளம்புவதற்கு முன்பும் பள்ளியைவிட்டு வந்த பிறகும் தீனிபோட்டு அவற்றை மாணவர்கள் முறையாகப் பராமரிக்க வேண்டும். கோழிக்குஞ்சுகளை அவர்கள் தங்களுடைய வீட்டிலேயே வளர்க்கலாம். வீட்டின் புழக்கடையில் இடம் இல்லாத பட்சத்தில் பள்ளி வளாகத்திலும் பராமரிக்கலாம்.

இந்தோனேசியா தலைநகரம் ஜகார்த்தாவில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள பாண்டுங் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த திட்டத்துக்கு ‘சிக்கனைசேஷன்’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.

கடந்த வியாழன் இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. அப்போது,“என்னை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள்” என்ற வாசகம் எழுதப்பட்ட அடையாள அட்டையுடன் கூண்டில் வைக்கப்பட்ட ஒரு டஜன் கோழிக்குஞ்சுகள் விநியோகம் செய்யப்பட்டன.

இந்த திட்டம் குறித்து பாண்டுங் நகர மேயர் ஓடட் முகமது டேனியல் கூறுகையில், “இது ஒருவிதமான ஒழுக்க நடவடிக்கையாகும். பள்ளி குழந்தைகளிடம் இருந்து ஸ்மார்ட்போன் பழக்கத்தை போக்குவதற்காக மட்டுமேஇந்த திட்டத்தை முன்னெடுக்கவில்லை. அதிபர் ஜோகோ விடோடோ அறிமுகப்படுத்திய மாணவக் கல்வியை விரிவுபடுத்தும் தேசியத் திட்டத்தின் ஒரு பகுதி இது” என்றார்.

செல்ல பிராணித் திட்டத்தைக் கடந்தமாதமே மேயர் டேனியல் அறிவித்திருந்தார். அதே நேரம் உள்ளூர் கோழிப்பண்ணைகளில் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய போதிய அவகாசம் தேவைஎன்றும் குறிப்பிட்டிருந்தார்.-எஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x