

ஆங்கில புத்தகங்களை வாசித்தல், ஆங்கில செய்தித்தாள்களை வாசித்தல் மூலமாக ஆங்கில மொழி புலமையானது நிச்சயமாக மேம்படும். ஆனால், ஒவ்வொரு மொழிக்கும் ஒருநயம் இருக்கும். அது வாய்க்கப்பெற்றதால் அந்த மொழியில்வித்தகராக முடியும். இதற்கு அம்மொழியின் இலக்கண தன்மையை, அதில் உள்ள சில நுட்பங்களைப் புரிந்துொண்டால்போதும். அந்த வகையில்தான் நமக்கு suffx-கள் கைகொடுக்கும்.
அதிலும் உரிச்சொல் அதாவது adjective suffix-களை கைவசப்படுத்திவிட்டால் லாவகமாக ஆங்கிலத்தில் எழுதலாம் பேசலாம்.
வாருங்கள்! நாம் அறிந்தும் அறியாமலும் கடந்து செல்லும் சில adjective suffix-களை உன்னிப்பாக கவனித்து புரிந்துகொள்வோம்