Published : 04 Nov 2019 09:59 AM
Last Updated : 04 Nov 2019 09:59 AM

மொழிபெயர்ப்பு: பச்சைகுத்தல் போன்ற புதிய கைக்கடிகாரம்

'New tattoo-like stopwatch'

Beijing

Researchers have developed a tattoo-like, elastic stopwatch display that operates at low voltages and can be safely stretched over the human skin, an advance that may lead to broad applications in smart wearables, soft robotics, and human-machine interfaces.

The researchers, including Yunlei Zhou and Jiachen Wang of Nanjing University in China, made developments to existing light-emitting devices which can be stuck on skin or other surfaces like a temporary tattoo.

The researchers sandwiched a layer of material that glows when electricity is passed between two flexible silver nanowire electrodes.

The researchers used the material to make a four-digit stopwatch display, which they mounted onto a volunteer's hand.

They said that the stretchable display was sufficiently bright to be seen under indoor lighting even at low voltages.

The bright stretchable display could find a broad range of applications in smart wearables, the researchers said.- PTI

பச்சைகுத்தல் போன்ற புதிய கைக்கடிகாரம்

பெய்ஜிங்

பச்சைகுத்தல் போன்ற நெகிழ்வான கைக்கடிகாரம் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்திருக்கிறார்கள். குறைந்த மின்னழுத்தத்திலும் இது செயல்படும். அது மட்டுமின்றி இதைநீட்டி மனித சருமத்தில் பயன்படுத்துவதும் பாதுகாப்பானதே. ஸ்மார்ட் அணிகலன்கள், மென் ரோபோட்டிக்ஸ், மனித-இயந்திர தொடர்பு போன்ற பயன்பாட்டியலில் இது ஒரு முன்னேற்றமாக கருதப்படுகிறது.

தற்போது பயன்பாட்டில் உள்ள ஒளி வெளியிடும் கருவியை மேம்படுத்தி தற்காலிகமாக பச்சைகுத்தும் ‘டாட்டூ’ போன்ற கருவியை சீனாவின் நான்ஜிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான யுன்லை ஜோ மற்றும் ஜாய்சென் வாங் ஆகிய இருவர் உருவாக்கி இருக்கிறார்கள்.

நெகிழ்வுத் தன்மை கொண்ட இரண்டு வெள்ளி நானோ கம்பி மின்முனைகளுக்கு இடையில் இந்த கருவியைஆராய்ச்சியாளர்கள் பொருத்தினார்கள். மின்சாரத்தை பாய்ச்சும்போது ஒளிரும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பொருளைக் கொண்டு நான்கு இலக்கு கொண்ட கைகடிகாரத்தை வடிவமைத்த ஆராய்ச்சியாளர்கள் இதைஅணிந்து கொள்ள விருப்பம் தெரிவித்ததன்னார்வலர் ஒருவர் கையில் கட்டிவிட்டார்கள்.

உள்ளரங்க ஒளி அமைப்பில், குறைந்தமின்னழுத்தத்தில்கூட இதை பார்க்கும்போது பிரகாசமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தார்கள். இதில் உள்ளபிரகாசமான நீட்டித்துக் கொள்ளும்படியான திரை அமைப்பை ஸ்மார்ட் அணிகலன்கள் பலவற்றில் பயன்படுத்தலாம் என்றும் கூறுகின்றனர். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x