அறிந்ததும் அறியாததும்: மன்னிக்க வேண்டுகிறேன் நட்பே!

அறிந்ததும் அறியாததும்: மன்னிக்க வேண்டுகிறேன் நட்பே!

Published on

மரியாதைக்கு உரியவர்களிடம் எப்படி மன்னிப்பு கோரலாம் என்பதை நேற்று பார்த்தோம். இன்று, அன்புக்கு உரியவர்களிடம் எப்படி மன்னிப்பு கேட்கலாம்என்று தெரிந்துகொள்வோமா?

நெருக்கமானவர்களிடம் நன்றி, மன்னிப்பு இதெல்லாம் அந்நியமான சொற்கள் இல்லையா என்கிறீர்களா! அப்படி இல்லை. நமக்கு பிடித்தமானதை ஒருவர் செய்யும் போது வாஞ்சையுடன் அவருக்கு நன்றி தெரிவிப்பதும், நாம் தவறிழைக்கும் போதுமன்னிப்பு கேட்பதும் உறவைப் பலப்படுத்தும்.

பல நேரம் நேரில் சொல்ல முடியாததை கடிதம் அல்லது மின்னஞ்சல் வழியாகச் சரியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்த முடியும்.
ஆகவே, எப்படியெல்லாம் அன்புக்கு உரியவர்களிடம் மன்னிப்பு கோரலாம் என்பதற்கு இதோ சில உதாரணங்கள்:

# I’m sorry for the trouble I caused.
# I apologize for the delay.
# I promise it won’t happen again.
# I’m sorry, but I can’t make it to the meeting.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in