

Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein
பள்ளியில் கற்றதை மறந்த பிறகும் எது நம் நினைவில் எஞ்சி நிற்கிறதோ அதுவே கல்வி - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் மேதைகளில் ஒருவர் ஐன்ஸ்டீன். அவர் முன்வைத்த சார்பியல் கோட்பாடு இன்றுவரை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
E = MC2 என்ற சூத்திரம் சாதாரண மக்களுக்கும் தெரிந்ததே. ஒளிமின் விளைவு, குவாண்டம் விசையியல் உள்ளிட்ட இவருடைய இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்காக 1921-ல் நோபல் பரிசு பெற்றவர். அத்தகைய மேதை பள்ளியில் படித்ததை மறந்த பிறகும் ஞாபகத்தில் மீதம் இருப்பதுதான் கல்வி என்கிறார். இதன் மூலம் மனப்பாடம் செய்வது அல்ல கல்வி, புரிந்துபடிப்பதே கல்வி என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்.