Published : 22 Oct 2019 08:47 AM
Last Updated : 22 Oct 2019 08:47 AM

மொழிபெயர்ப்பு: மராத்திய உணவு புத்தக அடுக்கில் புத்தம்புதிய ‘பங்கட்’

`Pangat': A fresh from the oven book on Marathi cuisine

New Delhi

Restricting Marathi cuisine to street food delicacies like Vada Pav, Missal Pav, or Bhelpuri would be an injustice to the region's rich culinary traditions as a new books claims to debunk myths surrounding the foods of Maharashtra.

Showcasing the versatility and sheer variety the cuisine, the book, "Pangat: A Feast -- Food and Lore from Marathi Kitchens", is written by culinary researcher Saee Koranne-Khandekar.

From the sophisticatedly spiced Kolhapuri mutton sukka to the tangy tamarind-based thecha, from a never-fail formula for frying fish to the wholesome chakolya 'pasta' and variants of karanji for the die-hard sweet-tooth, the book, according to the publisher, is any foodie's go-to guide to enhance their palate and repertoire of recipes.

Endorsed by noted food writer Kunal Vijayakar and celebrated chef Ranveer Brar, the book claims to be an informative guide on traditional recipes and food traditions of the region.
"I strongly believe that food cannot be looked at in isolation from regional nuances and communities. That's where Saee's book does complete justice to this beautiful state and its varied cuisine(s)," read a blurb given by chef Brar.- PTI

மராத்திய உணவு புத்தக அடுக்கில் புத்தம்புதிய ‘பங்கட்’

புதுடெல்லி

மராத்திய உணவு வகைகள் என்றாலே வடா பாவ், மிஸ்ஸல் பாவ் அல்லது பேல்பூரி போன்ற தெருவோர உணவு பண்டங்கள் என்றாகிவிட்டது. சாப்பாட்டில் செழிப்பான பாரம்பரியம் மிக்க மகாராஷ்டிரா மாநிலத்தை இப்படி சுருக்கிப்பார்ப்பது அநியாயம். இதை உணர்த்தும் முயற்சிதான் இந்த புதிய புத்தகம்.

வகைவகையான உணவு வகைகளை விவரிக்கும், ‘பங்கட்: ஏ ஃபீஸ்ட் - ஃபுட் அண்ட் லோர் ஃபிரம் மராத்தி கிச்சன்ஸ்’ என்ற புத்தகத்தை சாயி கொரன்னி கந்தேகர் என்ற சாப்பாட்டு ஆராய்ச்சியாளர் எழுதி இருக்கிறார்.

அட்டகாசமான மசாலா நிறைந்த கோலாபுரி மட்டன் சுக்காவில் தொடங்கி சுளீரென நாவிலே உரைக்கும் புளிப்பான தெச்சா, ஒருபோதும் சொதப்பாத மீன் வறுவல், நிறைவை தரும் சக்கோல்யா பாஸ்தா, இனிப்பு பிரியர்களுக்கான கரஞ்சி என அனைத்து வகையான சாப்பாட்டு பிரியர்களுக்கும் தேவையான செய்முறைகள் கொண்ட புத்தகம் இது.

பிரபல உணவு எழுத்தாளர் குணால் விஜயகார் மற்றும் சமையல் கலைஞர் ரன்வீர் பரார் இந்தப் புத்தகத்தை பரிந்துரைத்திருக்கிறார்கள். பாரம்பரிய சாப்பாட்டு செய்முறைகள் மற்றும் ஒவ்வொரு ஊரின் பாரம்பரிய உணவு ஆகியவை
குறித்த தகவல்கள் நிறைந்த கையேடு இது என்று அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

“ஊர் சார்ந்த விவரங்களையும் அதன் மக்களையும் தவிர்த்துவிட்டு உணவைப் பார்க்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அந்த வகையில் அழகிய மாநிலமான மகாராஷ்டிராவுக்கும் அங்குக் கிடைக்கும் வகைவகையான உணவுக்கும் சாய் எழுதி இருக்கும்
இந்தப் புத்தம் நியாயம் சேர்த்திருக்கிறது” என்று புத்தகத்தின் அட்டையில் சமையல் கலைஞர் ரன்வீர் பரார் எழுதி இருக்கிறார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x