Published : 22 Oct 2019 08:01 AM
Last Updated : 22 Oct 2019 08:01 AM

அறிந்ததும் அறியாததும்: குட்டி பாப்பா!

சிசு, குழந்தை என சிறுவயதினரை வயதுக்கு ஏற்ப தமிழில் அழைப்பது போல ஆங்கிலத்திலும் அந்தந்த வயதினருக்கான வார்த்தைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை இன்று தெரிந்து கொள்வோமா மாணவர்களே!

பிறந்த சிசுவைக் குறிக்கும் சொல், infant. அதாவது, Newborn child.

உதாரணத்துக்கு, My brother is 15 years old, but sometimes he behaves like an infant.

பிறந்த சிசு கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கும்போது குழந்தை என்று அழைப்போம் இல்லையா, அதற்கு இணையான சொல், baby.

உதாரணத்துக்கு, I always do some housework when the baby is sleeping.

சரி, இப்போது பாப்பா அடுத்த கட்டத்துக்கு வளர்ந்துவிட்டது. தத்தித் தத்தி நடைபழகிக் கொண்டிருக்கிறது. அப்படியானால், toddler.

உதாரணத்துக்கு, My elder sister’s toddler walks, but is yet to talk.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x