

பாட்டி: இன்று Compare ஐப் பற்றி விரிவாக பார்க்கலாமா!
இசை: சரி பாட்டி.
பாட்டி: Compare என்றால் என்ன?
உமையாள்: இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களோ அல்லது விஷயங்களோ இருக்கும் பொழுது, அதில் உள்ள ஒற்றுமைகள் (similarities) பற்றி பேசுவது என்று ஒரு தடவை சொல்லியிருந்தீங்க.
பாட்டி: மிகவும் சரி. Compare ஐப் பற்றி எடுத்துச் சொல்ல சில வார்த்தைகள் இருக்கின்றன.
இனியன்: அப்படியா!
பாட்டி: அந்த வார்த்தைகளை signal words என்று சொல்லலாம்.
மித்ரன்: அதனால் என்ன நடக்கும்?
பாட்டி: இந்த signal words ஐ பயன்படுத்தும்போது, இரண்டுக்கும் நடுவில் உள்ள similarities ஐ எளிதாக நாம் சொல்ல முடியும்.
பாட்டி: இந்த table ஐ பாருங்க.
இனியன்: ஓ. இதுதான் Signal words ஆ?
பாட்டி: Yes. சில ஆங்கில வார்த்தைகளும், அதற்கு தமிழ் விளக்கமும் இங்கே கொடுத்திருக்கிறேன்.
இசை: இந்த வார்த்தைகள் எல்லாம் நமக்கு பழக்கப்பட்ட வார்த்தைகள்தான்.
மித்ரன்: நான் கூட signal words என்றதும் கேள்விப்படாத வார்த்தைகளோ என்று நினைத்து விட்டேன்.
உமையாள்: நாம், இவை ஒவ்வொன்றுக்கும் வாக்கியம் அமைத்து பார்க்கலாம்.
(தொடரும்)
- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்