கொஞ்சம் Technique கொஞ்சம் English - 295: Third Conditional Statement - மறுபார்வை

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 295: Third Conditional Statement - மறுபார்வை
Updated on
2 min read

மித்ரன்: பாட்டி, அப்படியே Third Conditional Statement-க்கும் ஒரு review கொடுக்க முடியுமா?

பாட்டி: கண்டிப்பா சொல்லுறேன். உங்க doubt என்னனு சொல்லுங்க.

இசை: Practice தான் பாட்டி எங்களுக்கு வேணும்.

இனியன்: அப்போ தான் எங்களுக்கும் mind இல் நிற்கும்.

பாட்டி: சரி நேற்று நடந்த எதாவது ஒரு சம்பவத்தை சொல்லுங்க.

உமையாள்: ம்ம்ம். school க்கு போனோம்.

இசை: English Revision Test இருந்தது. அதை எழுதினோம்.

இனியன்: அப்புறம் lunch சாப்பிட்டோம்.

மித்ரன்: PT Period-வும் இருந்தது. ஆனால், syllabus முடிக்கணும்னு எங்களை விளையாட விடலை.

உமையாள்: ஆமாம். எங்க PT Periodஐயும் வாங்கிட்டாங்க.

பாட்டி: Ok. நேற்று PT Period உங்களுக்கு கிடைச்சிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?

இசை: எனக்கு கிடைச்சிருந்தா நான் Badminton விளையாடியிருப்பேன்.

இனியன்: எனக்கு கிடைச்சிருந்தா நான் Cricket விளையாடியிருப்பேன்.

உமையாள்: எனக்கு கிடைச்சிருந்தா நான் Table tennis விளையாடியிருப்பேன்.

மித்ரன்: எனக்கு கிடைச்சிருந்தா நான் Basket ball விளையாடியிருப்பேன்.

பாட்டி: ஆனால் PT Period தான் உங்களுக்கு கிடைக்கலையே.

இசை: ஆமாம் பாட்டி. கிடைக்கலைதான்.

உமையாள்: கிடைச்சிருந்தால் என்ன பண்ணியிருப்போம்னு சொன்னோம் பாட்டி.

பாட்டி: இப்போ கிடைச்சிருந்தா என்ன பண்ணியிருப்பீங்கன்னு சொன்னது கடந்த காலத்தை மாற்ற முயற்சிப்பதுதானே.

மித்ரன்: ஆமாம் பாட்டி.

பாட்டி: கடந்த காலத்தை போய், மாற்ற முடியுமா?

இனியன்: முடியாது பாட்டி.

உமையாள்: மாற்றுவது போல கற்பனை வேண்டுமானால் செய்து கொள்ளலாம்.

பாட்டி: இப்படி கடந்த காலத்தை conditional word உடன் சேர்த்து கற்பனை செய்து மாற்றுவதைத் தான் Third Conditional Statement என்று சொல்கிறோம். இப்போ புரியுதா?

மித்ரன்: தமிழில் சொல்லும்போது புரியுது.

பாட்டி: ஆங்கிலத்திலும் இதேதான். Third Conditional statement வாக்கியத்தில் Past Perfect Tense உம் Future Perfect Tense உம் வர வேண்டும்.

பாட்டி: Perfect Tense எப்போது பயன்படுத்துவோம். சொல்லுங்க.

உமையாள்: எங்கெல்லாம் “யிரு” என்ற வார்த்தை வருமோ, அங்கெல்லாம் பயன்படுத்துவோம் பாட்டி.

பாட்டி: எனக்கு கிடைச் ”சிரு” ந்தா நான் Basket ball விளையாடி ”யிரு” ப்பேன். என்று சொன்னீங்களே. அங்கு யிரு என்ற வார்த்தை வருகிறதா?

மித்ரன்: இரண்டு தடவை வருதே.

பாட்டி: Very good. Conditional clause இல் முதல் தடவையும், Main Clause இல் இரண்டாவது தடவையும் வருகிறது.

பாட்டி: நடந்து முடிந்த ஒன்றை பேசுகிறோம். அப்படி என்றால் என்ன Tense?

இனியன்: Past Tense.

பாட்டி: நடந்து முடிந்த ஒன்றில் ”யிரு” என்ற வார்த்தை சேர்ந்து வருகிறது என்றால் என்ன Tense?

மித்ரன்: Past Perfect Tense.

பாட்டி: அப்படியென்றால், Conditional Clause இல் Past Perfect Tense வர வேண்டும்.

பாட்டி: பொதுவாக Main Clause எப்படி இருக்கும்?

இனியன்: Future Tense இல் பாட்டி.

பாட்டி: இது, நடந்து முடிந்த ஒன்று என்றால் Main Clause எப்படி இருக்கும்?

உமையாள்: Future-in-the-Past.

பாட்டி: “யிரு” இங்கேயும் வருகிறது.

மித்ரன்: Future-in-the-Past perfect Tense ஆ பாட்டி?

பாட்டி: Correct.

இசை: If I had got the PT period, I would have played Badminton.

பாட்டி: Excellent. நாளை Examples பார்க்கலாம்.

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in