கொஞ்சம் Technique கொஞ்சம் English - 292: Future Tense or Past Tense - சில கேள்விகளும் பதில்களும்

கொஞ்சம் Technique கொஞ்சம் English - 292: Future Tense or Past Tense - சில கேள்விகளும் பதில்களும்

Published on

இனியன்: பாட்டி, நேத்து conditional statementsற்கு ஒரு table கொடுத்தீங்கள்ல. அதை என்னோட friend கிட்ட காட்டினேன்.

பாட்டி: Very good.

இனியன்: அதுல இருந்து, அவன் சில doubts கேட்டான்.

பாட்டி: சரி.

இனியன்: எனக்கு பதில் சரியா தெரியலை. உங்க கிட்ட கேட்டு வந்து சொல்லுறேன்னு சொல்லிட்டேன் பாட்டி.

மித்ரன்: கேள்வியை சொல்லு. நாம எல்லாரும் சேர்ந்து discuss செய்யலாம்.

இனியன்: Second conditional statement இல் Future Past Verb என்று போட்டுருக்கீங்க. அப்படின்னா என்னனு கேட்டான்.

இசை: இப்போ உனக்கு doubt என்னென்னா, இது Future Tense ஆ இல்லை Past Tenseஆ? சரியா?

இனியன்: ம்ம்ம்ம்ம்! இரண்டில் ஏதாவது ஒன்று தானே வர முடியும். அதெப்படி இரண்டும் ஒரே இடத்தில் வர முடியும்?

பாட்டி: சரி. நான் விளக்கமா சொல்லுறேன். கேட்டுக்கோங்க.

இனியன்: சொல்லுங்க பாட்டி.

பாட்டி: Future Past என்பது Future in the Past இன் சுருக்கம். இரண்டுமே கடந்த காலம் தான்.

உமையாள்: இரண்டுமே கடந்த காலம் என்றால்?

பாட்டி: இப்போது வருடம் என்ன?

மித்ரன்: 2024

பாட்டி: 2018 இல் நடந்த ஒரு சம்பவத்தை நீ சொல்கிறாய் என்று வைத்துக்கொள்வோம்.

இனியன்: அப்போ நான் 1st standard படிச்சிட்டு இருந்தேன்.

பாட்டி: அந்த சம்பவம் நடந்த நேரத்தில் நீ 2022 வது வருடத்தை குறிப்பிட்டு ஏதாவது ஒரு செய்தி சொல்லு பார்க்கலாம்.

இனியன்: 2022 இல் 4th standard படிச்சிட்டு இருந்தேன். அது தவிர வேற ஒன்னும் தெரியலையே!

பாட்டி: சரி, 1st standard இல் நீ எதை வைத்து நோட்டில் எழுதினாய்?

இனியன்: பென்சில் வைத்து எழுதினேன்.

பாட்டி: 4th standard ற்கு வந்த பிறகு?

இனியன்: 4th standard க்கு வந்த பிறகு பேனா வைத்து எழுதினேன்.

பாட்டி: இப்போது நடந்து கொண்டிருக்கும் 2024 வது (Present Tense) வருடத்திற்கு 2018 ம் கடந்த காலம் தான். 2022 ம் கடந்த காலம் தான். அதாவது Past Tense.

இசை: ஆமாம்.

பாட்டி: 2018 இல் நடந்த ஒரு சம்பவத்தை நீங்க சொல்ல வேண்டும். அப்படி சொல்லும் வேளையில், 2022 வது வருடத்தில் நடக்க போகிற ஒன்றையும் நீங்கள் சொல்ல வேண்டும்.

உமையாள்: ஓ, அப்படி!

இனியன்: 2022 இல் பேனா வைத்து எழுதுவேன் என்று 2018 இல் சொன்னேன்.

பாட்டி: இப்போது சொல்லுங்க. இந்த இடத்தில் 2022 வது வருடம் Present Tense ஆ இல்லை Past Tense ஆ இல்லை Future Tense ஆ?

இசை: Future Tense தான். ஆனால் அந்த வருடம் (2022) முடிந்து விட்டதே.

இனியன்: 2018 ற்கு 2022 ஆனது Future Tense.

மித்ரன்: 2024 ற்கு 2022 ஆனது Past Tense.

பாட்டி: 2022 இங்கே Future-in-the-Past.

உமையாள்: கடந்த காலத்தில் வரும் எதிர்காலம் என்று சொல்லலாமா?

பாட்டி: சொல்லலாமே!

இசை: கடந்த கால நிகழ்வு ஒன்றை நாம் பேசும்போது, அங்கே வருகிற எதிர்காலத்தைக் குறிப்பிட வேண்டுமென்றால், Future-in-the-Past ஐ நாம் பயன்படுத்தலாம்.

பாட்டி: Exactly! இது தொடர்பான Examples ஐ, நாளை பார்க்கலாம்.

(தொடரும்)

- கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in